எம்ஜிஆரை சொந்தம் கொண்டாடும் கமல்.. சந்தர்பவாதத்தின் உச்சம்.. கொதிக்கும் அதிமுக தலைவர்கள்

சென்னை: எம்ஜிஆரை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சொந்தம் கொண்டாடுவதால் அதிர்ச்சி அடைந்த அதிமுக தலைவர்கள் இது சந்தர்ப வாதத்தின் உச்சம் என்று கண்டித்துள்ளனர். தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி தென் மாவட்டங்களில் தமது மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் பிரசாரத்தை மதுரையில் கமல்ஹாசன் கடந்த ஞாயிறு அன்று தொடங்கினார். அப்போது பேசிய கமல், மதுரையை இன்னொரு தலைநகராக அறிவிப்போம். எம்ஜிஆர் கனவின் நீட்சிதான் இது. எம்ஜிஆரின் தொடர்ச்சி நான்தான். எம்ஜிஆரின் கனவே நிறைவேற்றுவேன் என்றார். இதைக்கேட்டு ரசிகர்கள் மிகுந்த ஆரவாரம் செய்தனர். ஏற்கனவே ரஜினியும், பாஜக மாநில தலைவர் எல் முருகன், தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோரும் எம்ஜிஆரை கொண்டாடி கருத்து சொல்லியிருந்தனர். இந்த சூழலில் கமலும் இப்படி ஒரு கருத்தை சொன்னதால் அதிர்ச்சி அடைந்த அதிமுக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Social media & sharing icons powered by UltimatelySocial
WhatsApp