நீ தேவதையா? உன்னை சந்திக்க நான் மரணிக்க வேண்டுமா ? பூஜா ஹெக்டே விடம் ‘ கூறும் காதல் வாசகம் . ராதே ஷியாம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு,

 

பிரபாஸ்-பூஜா ஹெக்டே நடிக்கும் ‘ராதே ஷியாம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு, சிறப்பு பார்வை வெளியீடு!

காதலர் தினமான இன்று பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், ‘ராதே ஷியாம்’ படக்குழு திரைப்படம் வெளியாகும் தேதியை அறிவித்துள்ளதோடு, படத்திலிருந்து ஒரு காட்சியையும் வெளியிட்டுள்ளது.

ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் பன்மொழிப்படமான ‘ராதே ஷியாம்’ 2021 ஜூலை 30 அன்று வெளியாகும். காதல் ததும்பும் கதாபாத்திரத்தில் பத்து வருடங்களுக்கு பிறகு இப்படத்தில் பிரபாஸ் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். ராதா கிருஷ்ண குமார் இயக்கும் திரைப்படத்தை யுவி கிரியேஷன்ஸ் சார்பில் வம்சி மற்றும் பிரமோத் தயாரிக்கின்றனர்.

இன்று வெளியிடப்பட்டுள்ள காட்சியானது ரோமில் படமாக்கப்பட்டுள்ளது. ரயில் ஒன்றில் தொடங்கும் காணொலி, காடுகளை நோக்கி பயணிக்கிறது. இத்தாலி மொழியில் ‘செய் உன் அங்கெலோ? தேவோ மோரிர் பெர் இன்காண்ட்ரர்டி?’ (     நீ தேவதையா? உன்னை சந்திக்க நான் மரணிக்க வேண்டுமா ? )  என்று காதல் பொங்க பூஜாவிடம் பிரபாஸ் உரையாடுகிறார். இதன் பொருள் என்னவாக இருக்கும் என்று பிரபாஸ் ரசிகர்கள் இணையத்தில் தேடி வருகின்றனர்.

இக்காணொலி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ள நிலையில், காதலர் தினத்திற்கான சரியான பரிசாக இது அமைந்துள்ளது என அவர்கள் கூறி வருகின்றனர். இந்த தசாப்தத்தின் மிகப்பெரிய காதல் படமாக ‘ராதே ஷியாம்’ இருக்கும் என்று ஏற்கனவே எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த சிறப்பு காட்சி வெளியாகி ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. படத்தின் ப்ரீ-டீசர் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.