கொரோனா கால பணிகளுக்கான நிலுவைத்தொகையை வழங்க கோரி பொதுப்பணித்துறை ஒப்பந்ததார்கள் முதல்வருக்கு மனு .
செய்தியாளார்களுக்கு பேட்டியளித்த பொதுப்பணித்துறை ஒப்பந்ததார்கள்செய்தியாளார்கள் சந்திப்பில் கூறியதாவது: கொரோனா கால பணிகளுக்கான ரூ – 135 கோடி நிலுவைத்தொகையை வழங்க கோரி பொதுப்பணித்துறை ஒப்பந்ததார்கள் முதல்வருக்கு மனு அளித்தனர் .
மேலும் பொது பணித் துறை செயலர், இயக்குநர் ஆகியோருக்கும் மனு அளித்தனர்.
பொதுப்பணித்துறை வாயிலாக கொரோனா காலத்தில் செய்து முடிக்கப்பட்ட அவசர பணிகளுக்கு ஒப்பந்ததாரர்களுக்கு உரிய பணம் பட்டுவாடா செய்யாமல் இன்று வரை நிலுவையில் உள்ளது . பொதுப்பணித்துறை கட்டிட ஒப்பந்ததாரர்கள் மற்றும் மின் ஒப்பந்ததாரர்கள் மூலமாக ,
கொரோனோ காலத்தில் கொேரானா தடுப்பு பணிக்காக, தமிழ்நாடு முழுவதும் அனைத்து மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ கல்லூரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் ,மாவட்ட தலைமை மருத்துவமனைகள் , அரசு தாலுகா மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் அமைப்பதற்கு தேவையான படுக்கை வசதி ,கழிப்பறை வசதி ,மின் வசதி மற்றும் ஆக்சிஜன் வசதி ,மின்விசிறி, டியூப் லைட்டுகள் மற்றும் இதர மின் பணிகள் ஆகியவை அனைத்தும் முதல்தர ஒப்பந்ததாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பெரும் இடையூறுகளுக்கு மத்தியில் 144 தடை உத்தரவு காலத்திலும் கடைகள், வேலை ஆட்கள் ,போக்குவரத்து வசதிகள் இல்லாமல் சிறப்பு பணிகளை செய்து முடித்துள்ளோம் . இதுவரையில் நாங்கள் செய்து முடித்த வேலைகளுக்கு தமிழ்நாடு முழுவதும் சுமார் ரூ. 135 கோடிக்கும் மேல் பணம் பட்டுவாடா செய்யப் படாமல் ,கடந்த ஆறு மாத காலமாக நிலுவையில் உள்ளது. ஒப்பந்ததாரர்கள் பணியின் காலத்தில் வாங்கிய கட்டுமானம் மற்றும் மின்பொருட்களுக்கான பணம் சம்பந்தப்பட்ட கடைக்காரர்களுக்கு செலுத்த முடியாத நிலையில் உள்ளனர் . ஆகவே தமிழக முதல்வர் குறித்த காலத்தில் செய்து முடிக்கப்பட்ட பணிகளுக்கான நிலுவை தொகையினை உடனடியாக வழங்கிட வேண்டும் என்று தெரிவித்தனர்.
- Makkal Nanayam