கீழ் முதுகில் முள்ளெலும்பு நழுவல் .2 வயது சிறுமிக்கு வெற்றிகரமான சிகிச்சை செய்து சாதனை.

கீழ் முதுகில் முள்ளெலும்பு நழுவல் .2 வயது சிறுமிக்கு வெற்றிகரமான சிகிச்சை செய்து சாதனை.

 

கீழ் முதுகில் முள்ளெலும்பு நழுவல் .2 வயது சிறுமிக்கு வெற்றிகரமான சிகிச்சை செய்து சாதனை.

கீழ்ப்புற முதுகுத்தண்டில் அல்லது கீழ் முதுகில் முள்ளெலும்பு மற்றொன்றின் மீது சரிந்து முதுகுத்தண்டு மற்றும் நரம்பின் வேர்பகுதியில் அழுத்தத்தை விளைவிக்கிறது .
விபத்து ,சிதைவு அல்லது பிறவி கோளாறு ஆகியவற்றினாலேயே பொதுவாக இது ஏற்படுகிறது .

வளரிளம் பருவத்தினர் முதிர்ச்சி அடையும் வயது வந்த நபர்கள் ஆகியோரிடையே தான் இந்த பாதிப்பு நிலை மிக பொதுவானதாக காணப்படுகிறது.
கடுமையான அறிகுறிகளை விளைவிக்கின்ற இத்தகைய நிகழ்வு குழந்தைகளிடம் காணப்படுவது மிக அரிதாகும் .
தமிழ்நாட்டின் சுகாதார சேவை துறையில் முன்னணி சங்கிலித்தொடர் நிறுவனமாக திகழும் காவேரி மருத்துவமனை எல்.5 , எஸ்-1 என்ற முள்ளெலும்பு மற்றொன்றின் மீது முழுமையாக சரிவடைந்திருக்கும் முள்ளெலும்பு நிறுவல் பாதிப்பு இருப்பதாக கண்டறியப்பட்ட இரண்டு வயது சிறுமிக்கு வெற்றிகரமாக சிகிச்சை அளித்திருக்கிறது. அச்சிறுமிக்கு திடீரென காலில் வலி உருவானது . இதன் காரணமாக அவளால் நகர வோ அல்லது நடக்கவோ இயலவில்லை . இதைத் தொடர்ந்து அவளது கீழ் முதுகில் கட்டி போன்ற ஒரு வீக்கம் உருவானது .
இதனால் உள்ளூர் மருத்துவமனைக்கு அந்த சிறுமி உடனடியாக அழைத்து செல்லப்பட்டு , எம்ஆர்ஐ ஸ்கேன் சோதனை மற்றும் அதற்கு பிறகு வேறு சில செய்யப்பட்டதில் குழந்தைக்கு கடுமையான தண்டுவட மற்றும் நரம்பு அழுத்த பாதிப்பு இருப்பதும் மற்றும் இதை சரிசெய்ய அறுவைச் சிகிச்சை அவசியம் என்பதும் உறுதி செய்யப்பட்டது என்று காவிரி மருத்துவமனையின் முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை துறையின் தலைவர் டாக்டர் ஜி.பாலமுரளி கூறினார். காவேரி

மருத்துவமனையின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் மணிகண்டன் செல்வராஜ் செய்தியாளர்களிடம் பேசியபோது : –

இந்த சிகிச்சையின் நேர்வின் தனிச்சிறப்பு பற்றி பேசுகையில், இதுவரை இதே போன்று பாதிப்பு நிலைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு இருப்பது உலகளவில் மூன்று வயதான ஒரு குழந்தைக்கு மட்டுமே, 2 வயது குழந்தைக்கு காவிரி மருத்துவமனையில் தற்போது வழங்கப்பட்டிருக்கும் இந்த சிகிச்சை உலக அளவில் இந்த நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் முதல் நேர்வு என்பது குறிபிடத்தக்கது. இக்குழந்தைக்கு வெற்றிகரமாக சிகிச்சை அளித்து எழுந்து நிற்கவோ மற்றும் நடக்க இயலாத கடுமையான வலியில் இருந்து விடுதலை அளித்து இருக்கும் டாக்டர் .பாலமுரளி மற்றும் அவரது குழுவினர் நான் மனதார பாராட்டுகிறேன் என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.