சென்னை தெற்கு மாவட்ட தி மு க இளைஞர் அணி சார்பாக கலைஞர் நகர் பகுதி இராணி அண்ணா நகர் வாசிகளுக்கு பொங்கல் பரிசு நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

சென்னை தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில் தமிழ் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாள் சமத்துவ பொங்கல் விழா நிகழ்ச்சி நடைப்பெற்றது. சென்னை தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளார் ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா ஏற்பாட்டில் நடைபெற்ற பொங்கல் பரிசு தொகுப்பு நல திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சியில், 1821 நபர்களுக்கு சென்னை தெற்கு மாவட்ட திமுக செயலாளார் மார்சுப்பிரமணி, கலை இலக்கிய பகுத்தறிவு பேரவைத் துணைத் தலைவரும், தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினருமான தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் வழங்கினர்.
மேலும் இந்நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் க.தனசேகரன். உ. துரைராஜ் , எஸ்.டிதங்கராஜன் , வாசுகி பாண்டியன், ஆர்.பழனிச்சாமி , ராஜ் செழியன், கலைஞர் நகர் தெற்கு பகுதி செயலாளார் கே. கண்ணன். வடக்கு பகுதி செயலாளார் மு . இராசா, மற்றும் மாவட்ட, பகுதி, வட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.