தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி சார்பாக 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகில் மாநில தலைவர் மு. லட்சுமி நாராயணன் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது . இந்த உண்ணாவிரத போராட்டத்தை அகில இந்திய “டீ” பிரிவு அலுவலர் அகில இந்திய தலைவர் கணேசன் தொடக்கி வைத்தார்.
மேலும் மாநிலப் பொருளாளர் இரா. குமார் , டி.இ.எஸ்.டி. எஃப் பொதுச் செயலாளர் நா .ரங்கராஜன் , தமிழக அரசு அலுவலர் ஒன்றியம் மாநில தலைவர் த.அமிர்தகுமார் , அரசு ஊழியர்கள் சங்கம் மாநிலத்தலைவர் சு.தமிழ்ச்செல்வி மேலும் நிர்வாகிகள் மாரியப்பன், வில்சன் பர்ணபாஸ் , அ. சுதாகரன், இரா . ஆறுமுகம் மற்றும் மாவட்ட மாநில நிர்வாகிகள் உட்பட 1000 க்கம் மேற்பட்டோர் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் பங்கு பெற்றனர்.