“மண்ணிலிருந்து விற்பனைக்கு ” என்ற குறிக்கோளுடன் விளை பொருட்களை தென்னிந்தியா முழுவதும் உள்ள நுகர்வோர்களின் கரங்களில் நேரடியாக கொண்டு செல்லும் நோக்கத்தோடு புதிய நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளதாக வேகூல் ( Way Cool ) தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கார்த்திக் ஜெயராமன் தெரிவித்துள்ளார்…
சென்னை கிண்டியில் உள்ள தனியார் விடுதியில் நுகர்வோருக்கான உணவு பொருட்கள் விற்பனைக்கான “பிராண்ட்ஸ் நெக்ஸ்ட்” (Brand Next ) என்னும் தனியார் நிறுவனத்தின் அறிமுகம் குறித்தான செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது..
இந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது வேகூல் ( Way Cool) நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கார்த்திக் ஜெயராமன் மற்றும் பிராண்ட்ஸ் நெக்ஸ்ட் தலைமை செயல் அதிகாரி ரவீந்திரன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
செய்தியாளர்கள் சந்திப்பில் அவர்கள் தெரிவித்ததாவது:-.
மண்ணிலிருந்து நேரடி விற்பனை எனும் மதிப்புமிக்க விநியோக சங்கிலி தொடர்பை உறுதிப்படுத்தும் விதமாக தங்களின் புதிய நிறுவனத்தை துவங்கி உள்ளோம்.
மக்களுக்கான உணவு தேவையை பூர்த்தி செய்யும் தனிதன்மை கொண்ட நிறுவனமாக இது திகழும் .
இந்நிறுவனத்தின் மூலம் உணவு வணிகத்தில் வெற்றி பெற கடந்த இரண்டு ஆண்டுகளாக வலுவான அடித்தளம் அமைத்து நுகர்வோரின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வதன் மூலம் மேற்கொள்ளப்படும் மாற்றமானது சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் நுகர்வோர்களுக்கு பயனுள்ளதாக அமையும்.
இந்த நிதி ஆண்டில் தங்கள் நிறுவனத்தின் வருவாயினை இரட்டிப்பாக்கும் திட்டத்தினை செயல்படுத்தயுள்ளதாக தெரிவித்தனர்.