சர்வதேச பொறியியல் கொள்முதல் 10வது கண்காட்சி சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்றது .
இக்கண்காட்சியை தமிழ்நாடு சிறு ,குறு ,நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா. மோ .அன்பரசன் தொடங்கி வைத்தார் .

சர்வதேச பொறியியல் கொள்முதல் 10வது கண்காட்சி சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்றது .
இக்கண்காட்சியை தமிழ்நாடு சிறு ,குறு ,நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா. மோ .அன்பரசன் தொடங்கி வைத்தார் .
மேலும் இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு சிறு ,குறு ,நடுத்தர தொழில் துறை செயலாளர் அருண் ராய் , ஒன்றிய வர்த்தகம் மற்றும் தொழில் துறை இணைச் செயலாளர் எல். சத்ய ஸ்ரீநிவாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர் .
இக் கண்காட்சி மற்றும் கருத்தரங்கின் இந்திய தலைவரான அருண்குமார் கரோடியா பேசுகையில்,
இக்கண்காட்சியில் உலக அளவிலான கொள்முதல் தொடர்பான கருத்தரங்குகள் , 1500 உலகத்தரம் வாய்ந்த பொருட்களின் விலைப்பட்டியல், ஜி20 அமர்வுகள் 300 வெளிநாட்டு கொள் முதலீட்டாளர்கள் , 300 கண்காட்சி பங்கேற்பாளர்கள் மற்றும் 10,000 வர்த்தக பார்வையாளர்கள்  பங்கேற்க உள்ளனர் .
இந்தியாவுக்குள் புதிய சந்தையை உருவாக்குவதற்காகவே இந்த கண்காட்சி முயற்சி மேற்கொள்ளப்படுகிறது  .
இதற்கு உதவும் விதமாக பல்வேறு நிறுவனங்களுக்கிடையே கூட்டுறவை உருவாக்கி,  வர்த்தக உறவுகளை வலுப்படுத்தி ,இந்தியா மற்றும் அதன் பங்குதாரர்களோடு வர்த்தகத்தை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொண்ட மேற்கொள்ள படுகிறது.
மேலும் வெளிநாட்டு நிறுவனங்களின் திறன்களை காட்சிப் படுத்துவதற்கான வாய்ப்பையும் இக்கண்காட்சி உதவுகிறது .
அதேபோல்  இந்தியாவில் உள்நாட்டு பொறியியல் திறனை  உலக அளவில் காட்சி படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாக அமையும் என்று அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Social media & sharing icons powered by UltimatelySocial
WhatsApp