மெட்ராஸ் மேனேஜ்மென்ட் அசோசியேஷன் (எம்.எம்.ஏ) 2019-20ஆம் ஆண்டிற்கான ‘இந்தியாவின் சிறந்த நிர்வாக அசோசியேஷன் ’ விருது.

மெட்ராஸ் மேனேஜ்மென்ட்  அசோசியேஷன் (எம்.எம்.ஏ) 2019-20ஆம் ஆண்டிற்கான ‘இந்தியாவின்  சிறந்த  நிர்வாக அசோசியேஷன் ’ விருது.

மெட்ராஸ் மேனேஜ்மென்ட் அசோசியேஷன் (எம்.எம்.ஏ) 2019-20ஆம் ஆண்டிற்கான ‘இந்தியாவில் சிறந்த நிர்வாக அசோசியேஷன் ’ விருதினை பெற்றுள்ளது. அகில இந்திய மேலாண்மை சங்கம் -ஏ.ஐ.எம்.ஏ (AIMA )இன் 47 வது தேசிய மேலாண்மை மாநாட்டின் ஒரு பகுதியாக, செப்டம்பர் 21, 2020 அன்று அகில இந்திய மேலாண்மை சங்கத்தின் (AIMA) தலைவர் சஞ்சய் கிர்லோஸ்கர் அவர்களால் ஒரு இணைய வழி நிகழ்வில் இந்த விருது வழங்கப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும், அகில இந்திய மேலாண்மை சங்கத்தின் (AIMA ) நடுவர் நாடு முழுவதிலுமுள்ள நிர்வாக சங்கங்களிலிருந்து சிறந்த சங்கத்தை தேர்வுசெய்கிறார். அவை தொழில்முறை திறன் மற்றும் செயல்பாட்டு சிறப்பை உருவாக்குவதில் தரங்களை நிர்ணயித்துள்ளன. அதன் அடிப்படையில் எம்.எம்.ஏ (MMA) அதிக வாக்குகளைப் பெற்று முதலிடத்தைப் பிடித்தது. இது போன்று தொடர்ச்சியாக 11 வது முறையாக எம்.எம்.ஏ விருதை வெற்றிகரமாக வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்ச்சியில் பேசிய எம்.எம்.ஏ.வின் தலைவர் ரவிச்சந்திரன் புருஷோத்தமன் கூறியதாவது ,“எம்.எம்.ஏ என்பது ஒரு செயல்திறன் மிக்க மற்றும் தொழில்முறை அமைப்பாகும், இது நாட்டின் இந்த பகுதியில் மேலாண்மைத் துறையை பரப்புவதில் உறுதியாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து பிரிவில் முதலிடம் வகிப்பதில் பெருமிதம் கொள்கிறோம். இவ் வெற்றிக்கு எம்.எம்.ஏ மேற்கொண்ட முயற்சியின் தரத்தை மட்டுமே நிகழ்ச்சியில் காட்டுகிறது. ”
எம்.எம்.ஏ இன் நிர்வாக ஆர் . விஜயகுமார் (ஓய்வு) வி.எஸ்.எம் கருத்துப்படி, “இது சந்தேகத்திற்கு இடமின்றி நம் அனைவருக்கும் மகத்தான பெருமைக்குரிய தருணம். உண்மையில், தலைவர் ,, அலுவலகப் பொறுப்பாளர்கள்,

முன்னாள் தலைவர்கள், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மற்றும் 8000 வலுவான உறுப்பினர்கள் ஆகியோரின் தீவிர ஆதரவு இல்லாமல் இந்த சாதனை சாத்தியமில்லை.

எம்.எம்.ஏ தற்போது 8000 க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. மேலும் இந்த மெட்ராஸ் மேலாண்மை சங்கம் மேம்பாட்டு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக வழக்கமான நிகழ்ச்சிகளை நடத்துகிறது. இது தமிழ்நாடு முழுவதும் முக்கியமான நகரங்கள் மட்டுமின்றி சிறு நகரங்களில் கூட தன் தடத்தை பதித்துள்ளது.

மெட்ராஸ் மேலாண்மை சங்கம் (எம்.எம்.ஏ) பற்றி:
நாட்டின் இந்த பகுதியில் மேலாண்மை கல்வி, பயிற்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் 1956 ஆம் ஆண்டில் மெட்ராஸ் மேலாண்மை சங்கம் (எம்.எம்.ஏ) நிறுவப்பட்டது. இது அகில இந்திய மேலாண்மை சங்கத்தின் (AIMA) மிகப்பெரிய துணை அமைப்பாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.