உலகிலேயே வீடு வீடாக சென்று காய்ச்சல், சளி உள்ளிட்டவற்றை பரிசோதன செய்த மாநிலம் தமிழகம் மட்டும் தான்

உலகிலேயே வீடு வீடாக சென்று காய்ச்சல், சளி உள்ளிட்டவற்றை பரிசோதன செய்த மாநிலம் தமிழகம் மட்டும் தான்

சென்னை …

 திருவொற்றியூர் மண்டலத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அமைச்சர் ஆர் .பி . உதயகுமார் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆர் .பி . உதயகுமார்,
உலகிலேயே வீடு வீடாக சென்று காய்ச்சல், சளி உள்ளிட்டவற்றை பரிசோதன செய்த மாநிலம் தமிழகம் மட்டும் தான். வளர்ந்த நாடுகளில் கூட யாரும் இந்த அளவுக்கு பரிசோதனை மேற்கொள்ளவில்லை .
தமிழகத்தில் மக்கள் சேவை மூலம் நம்பிக்கை பெற்ற கழகம் அதிமுக கழகம் தான். அதிமுகவில் ஆரோக்கியமான கருத்து பரிமாற்றம் இருக்க தான் செய்யும்.
ஆரோக்கிய நிலையை உருவாக்க தான் ஆலோசனை நடைபெற்றது ராமன் லட்சுமணனுக்கு இடையே  உள்ள புரிதல் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இடையே இருக்கிறது.
அதிமுக ராணுவ கட்டுபாடோடு உள்ளது   முதல்வர் வேட்பாளர்  குறித்து பேச கூடாது என்று தலைமை  அறிவுறுத்தி உள்ளது .
அதிமுகவில் கூட்டணி வலுவாக இருக்கிறது கூட்டணி கட்சி என்றாலும்  அவரவர் கருத்தை சொல்லதான் செய்வார்கள். அவரவர் விருப்பத்தை சொல்ல எந்த தடையும் கிடையாது .
 உதயநிதி ஸ்டாலின் பொதுவழியில் நாகரீகம் கருதி பேச வேண்டும் உதயநிதிக்கு ஸ்டாலின்  பயிற்சி அளிக்க வேண்டும்.  தமிழகத்தில் இரண்டாம் தலைநகர் தொடர்பாக தொடர் வேண்டுகோள் வைத்து வருகிறோம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.