சென்னை அண்ணா நகர் தொகுதி டி.பி. சத்திரம் 102 வது வார்டு பாரத பிரதமர் நரேந்திர மோடி 70வது பிறந்தநாள் விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக திரைப்பட நடிகையும் , மாநில கலை இலக்கிய பிரிவு தலைவருமான காயத்ரி ரகு ராம் கலந்து கொண்டு அப்பகுதி மக்களுக்கு ஐந்து லட்சம் மதிப்புள்ள மத்திய அரசு காப்பீட்டு அட்டை மற்றும் நல உதவிகளையும் வழங்கினார் .
இந்நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் தனசேகர் , மாநில எஸ் . சி . பிரிவு தலைவர் நாகராஜ் , மாநில எஸ். சி. பிரிவு துணைத் தலைவர் கபிலன், மத்திய சென்னை மேற்கு மாவட்ட கலை இலக்கியப் பிரிவு தலைவர் மாய சக்தி, எழும்பூர் பிரசாத் ,மனோகர் ,ஸ்ரீகாந்த், சிவகுமார், எஸ்.சி .பிரிவு மாவட்டச் துணைத் தலைவர் ஒண்டிவீரன் கரிகாலன் மற்றும் மாவட்ட , மண்டல, வட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.