சென்னை மார்ச் 2, 2023 :-
மேக் இன் இந்தியாவை மையமாகக் கொண்ட ஒரு ஸ்மார்ட் மின் இயக்க இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான டாவோ ஈவி டெக் (DAO EV Teah) புதுமையான நம்பகமான மற்றும் உயர்ரக தயாரிப்புகளை உற்பத்தி செய்வதன் மூலம் இந்தியாவில் குறிப்பிடத்தக்க இருப்பை தக்க வைக்க தயாராகி வருகிறது .
மார்ச் 2, 2023 அன்று டாவோ நிறுவனத்தின் புதிய மின் இயக்க இருசக்கர வாகனத்தின் அறிமுக நிகழ்வு சென்னையில் நடத்தது .
இந்நிகழ்வில் டாவோ ஈ.விடெக் (DAO EV Tech)கின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரிமான மைக்கேல் லியோ புதிய வாகனங்களை அறிமுகம் செய்து இந்தியாவில் விரிவாக்கம் செய்வதற்கான தங்களது நிறுவனத்தின் திட்டங்கள் அறிவித்தார் .
டவோ ஈ.விடெக் (DAO EV Tech) கின் தலைவர் மைக்கேல் லியு கூறுகையில் :-
எந்த ஒரு மின் இயக்க இருசக்கர வாகன உற்பத்தியாளருக்கும் தமிழ்நாடு சந்தை மிகவும் முக்கியமானது .
இதற்கு மூன்று அடிப்படைகள் காரணங்கள் உள்ளன –
முதலாவதாக தமிழ்நாட்டில் தலைநகரான சென்னையில் 73 % அதிக இருசக்கர வாகன பயன்பாடுகள் விகிதம் உள்ளது .
இது மும்பை மற்றும் பெங்களூரு போன்ற மற்ற முக்கிய நகரங்களை விட கிட்டத்தட்ட இரு மடங்காகும் .
மின்சார வாகனங்கள் துறை என்பது வளர்ந்து வரும் வணிகம் ஆகும்.
இது தொடர்பான தொழில்நுட்பத்தை விரைவாக ஏற்றுக் கொள்ளும் இளைஞர்கள் மீது அதிக கவனம் செலுத்துகிறது .
மேலும் தமிழ்நாட்டில் அதிக இளைஞர்கள் எண்ணிக்கை உள்ளதால் இம் மாநிலம் இயற்கையாகவே மின்சார வாகனங்களுக்கு ஏற்ற இடமாக உள்ளது .
சிறந்த கலாச்சாரம் மற்றும் அதன் குடிமக்களின் தர்க்க ரீதியான பகுப்பாய்வு காரணமாக தாவோ போன்ற எந்த ஒரு தரமான தயாரிப்பு நிறுவனமும் சந்தையில் நுழைய ஊக்குவிக்கப்படுகிறார்கள் .
தமிழ்நாடு மாநிலத்தில் மதுரை ,பொள்ளாச்சி, கோயம்புத்தூர் ,மற்றும் தஞ்சாவூரிலும் முறையே நான்கு டீலர்களை தாவோ ஈவீ டெக் (DAO Ev Tech)நிறுவனம் கொண்டுள்ளது .
மேலும் அடுத்த சில மாதங்களில் தாவோ 20 புதிய டீலர்களை தமிழ்நாட்டில் நியமிக்கப்பட உள்ளது .
இதன் மூலம் சென்னைக்கு அருகிலுள்ள 2மற்றும் 3 ஆம் தர நகரங்களில் உள்ள வாடிக்கையாளர்களை சென்றடைய டாவோ நிறுவனம் திட்டமிடப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.