இந்தியன் வங்கியுடன் அலகாபாத் வங்கி இணைப்பு மற்றும் துவக்க விழா.

இந்தியன் வங்கியுடன் அலகாபாத் வங்கி இணைப்பு மற்றும் துவக்க விழா.

 

இந்தியன் வங்கியுடன் அலகாபாத் வங்கி இணைப்பு மற்றும் துவக்க விழா.

சென்னை : மத்திய அரசின் நிதிதுறை வழிகாட்டுதல்படி நிர்வாக சுமை மற்றும் நிதிச்சுமையினை குறைத்து பண பரிவர்த்தனையை எளிதாக்க தேசிய வங்கிகள் ஒன்றோடு ஒன்றாக இணைக்கபட்டு வருகின்றன.

உத்திரபிரேதச மாநிலத்தில் முதன் முதலாக துவக்கபட்டு, மேற்கு வங்காள மாநிலத்தினை தலைமையிடமாக கொண்டு பல்வேறு கிளைகளுடன் செயல்பட்டு வந்த அலகாபாத் வங்கி இந்தியன் வங்கியுடன் இணைக்கப்பட்டது. சென்னை அண்ணாசாலையில் உள்ள அலகாபாத் வங்கி அதேபகுதியி்ல் உள்ள இந்தியன் வங்கியுடன் இணைக்கபட்டது. சென்னை புரசைவாக்கம் வெள்ளா தெருவில் செயல்பட்டு வந்த அலகாபாத் வங்கியானது டாக்டர்.அழகப்பா சாலை அமைந்துள்ள இந்தியன் வங்கியுடன் இணைக்கும் விழா வங்கியின் மைய பகுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இந்தியன் வங்கியின் நிர்வாக இயக்குநர். களபொதுமேலாளர். வங்கி உழியர்கள். மற்றும் வாடிக்கையாளர்கள் அனைவரும் இணைந்து குத்துவிளக்கேற்றி வங்கியின் இணைப்பு விழாவினை சிறப்பித்தனர். மேலும் நிகழ்ச்சிகான வரவேற்புரையை இந்தியன் வங்கியின் சென்னை வடக்கு மண்டல மேலாளர் ஆறுமுகம் வழங்கினார். சிறப்பு விருந்தினராக இந்தியன் வங்கியின் நிர்வாக இயக்குநர். எம்.கே பட்டசார்யா கலந்து கொண்டு இணைப்பு விழாவை துவக்கி வைத்தார்.
இதில் சென்னை மண்டல கள பொதுமேலளார் கே.சந்திரரெட்டி,
சென்னை தெற்கு மண்டல மேலாளர் ஏ.பழனி
சென்னை பூந்தமல்லி மண்டல மேலாளர்
எம். வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த இணைப்பு விழா ஏற்பாட்டியினை சென்னை புரசைவாக்கம் இந்தியன் வங்கியின் கிளை மேலாளர் சுமன் குமார்ராமன் ஏற்பாடு செய்து இருந்தார். இந்த நிகழ்ச்சியில் இரு வங்கி உழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள். பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். சென்னை வடக்கு மண்டல துணைமேலாளர் . கே.பி. ராமன் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.