ரத்த குழாய்களில் கால்சிஃபைட் அடைப்புகைள அகற்றும் ஆர்பிட்டல் அதெரெக்டோமி சிகிச்சை .
இந்தியாவின் முன்னணி தலைமை இருதயநோய் நிபுணரான டாக்டர். ஜி. செங்கோட்டுவேலு இரண்டு பயனாளிகளுக்கு நாவல் ஆர்பிட்டல் அதரெக்டோமி சிகிச்சையை இந்தியாவிலேயே முதன் முறையாக செய்து சாதனை புரிந்துள்ளார்.
ஆர்பிட்டல் அதெரெக்டோமி இந்தியாவில் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த இரண்டு சிகிச்சைகளே இந்தியாவில் முதல் நிகழ்வுகளில் ஒன்றாகும்.
டாக்டர். ஜி.செங்கோட்டுவேலு அப்போலோ மருத்துவமனையின் மூத்த தலைமை இருதயநோய் நிபுணர் ஆவார்.
சென்னை அப்பல்லோ முதன்மை மருத்துவமனைகுழுவினருடன் இணைந்து, இருதய தமனிகளில் அதிகளவு கால்சியம் படிந்த நோயாளிகளுக்கு ஆர்பிட்டல் அதிரெக்டோமியைப் பயன்படுத்தி சிகிச்சை அளித்தனர்.
டாக்டர். ஜி.செங்கோட்டுவேலு செய்தியாளார்களிடம் தெரிவித்ததாவது :-
முதல் இரண்டு பயன் பெற்றவர்களில் ஒரு நோயாளி 72 வயது முதியவர் . அவர் ஏற்கனவே 15 ஆண்டுகள் முன்பாக பைபாஸ் அறுவை சிகிச்சை செய்துகொண்டவர் .
அவர் மார்பு வலி மற்றும் கடுமையான கால்சியம் படிந்த தமனியைக் கொண்டிருந்தார். மீண்டும் ஒரு பைபாஸ் அறுவை சிகிச்சை அளிப்பதற்கு நோயாளியின் நிலைமை பொருத்தமற்றதாக இருந்தது. மெதுவான மற்றும் அதிக வேகத்தில் டயமண்ட் பேக் ஆர்பிட்டல் அதெரெக்டோமி சாதனத்தைப் பயன்படுத்தி கால்சியத்தை வெற்றிகரமாக டாக்டர் குழு அகற்றினார்கள்.
கால்சியம் படிந்த இரத்த குழாய்கள் சரி செய்வது கடினமானவை.
வழக்கமான பலூன் ஆஞ்சியோபிளாஸ்டி வேலை செய்யாததால் சிகிச்சையளிப்பது என்பது மிக சவாலாக இருந்தது.
இந்த மாதிரியான கால்சியம் படிந்த இரத்த குழாய்களுக்கு சிகிச்சையளிக்க பல கருவிகள் உள்ளன. சுழலும் அதிவேக அறுவை சிகிச்சை ROTA, இன்ட்ராவாஸ்குலர், லித்தோட்ரிப்சி, சிறப்பு பலூன்கள் போன்றவை அவற்றுள் சில.
சுழலும் அதிவேக அறுவை சிகிச்சை ROTA சில ஆண்டுகளாக உள்ளது. ஷாக் வேவ் இன்ட்ராவாஸ்குலர் லித்தோட்ரிப்சி Intra vascular lithotripsy 2 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது .
இது அல்ட்ராசவுண்ட் அலைகளை அடிப்படையாகக் கொண்டது.
ஆர்பிட்டல் அதெரெக்டோமி என்பது ஸ்டென்ட் பொருத்துவதற்கு முன் கால்சிஃபைட் பிளாக்குகளை (அடைப்பு ) திறக்கப் பயன்படும் ஒரு புதுமையான சிகிச்சையாகும்.
இது 1.25 மிமீ வைரம்-பூசப்பட்ட கருவியாகும்.
இது கால்சியத்தை தோராயமாக 2 மைக்ரான் அளவுள்ள மணல் போல் நுண்ணிய துகள்களாக மாற்றுகிறது
மற்றும் கால்சியத்தில் மைக்ரோ முறிவுகளை முன்னோக்கி உருவாக்குகிறது. அந்த கருவி ஒரு வட்ட இயக்கத்தில் சுழலும், முன்னோக்கி மற்றும் பின்னோக்கி இயக்கமாக இது செயல்படுகிறது. இந்தக்கருவி குறைந்த மற்றும் அதிக வேகத்தில் இயக்கப்படலாம் மற்றும் நோயாளியின் உடற்கூறியல் அடிப்படையில் அது தீர்மானிக்கப்படுகிறது.
இந்தச் கருவி , இந்த கால்சிஃபைடு பிளாக்குகளுக்கு சிகிச்சையளிப்பதை எளிமையாக்குகிறது. இதனை பயன்படுத்த முறையான பயிற்சி பெற வேண்டும்.
இந்த மருத்துவக் குழுவினர் பல புதுமையான துல்லியமான ஸ்டென்டிங் நுட்பங்களை கொண்டு மிக சிக்கலான சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது
இந்திய மருத்துவத்துறைக்கு இது ஒரு மைல்கல்லாகும்.