வெல்லத்தின் பயன்கள்:*

 

*இன்றைய 31-07-2020 மருத்துவக் குறிப்பு!*

 

*வெல்லத்தின் பயன்கள்:*

வெல்லம் கரும்புச் சாறு அல்லது பனையில் இருந்து தயாரிக்கப்படுகிறது. வெல்லம் இரும்பு சத்து மிகுந்தது. தமிழகத்தில் பனை மரத்தின் வெல்லத்தை இரண்டு வகையாக உள்ளன. முற்றிலும் சுத்தப்படுத்த படாத வெல்லம் கருப்பட்டி என்பர்; நன்கு சுத்தம் செய்து இதை சுத்தப்படுத்தப்பட்ட படிகங்களாக உருவாகும் சர்க்கரை, ‘பணங்கற்கண்டு’ எனப்படும். பாலில் பனங்கற்கண்டை சேர்த்து, காய்ச்சி, காலை மாலை என இரு வேளை குடித்ஹ்டு வந்தால், தொண்டை கரகரப்பு, மார்புச்சளி இளகும். கருவுற்ற பெண்களுக்கும், மகப்பேறு பெண்களுக்கும் ஏற்படுகின்ற மலச்சிக்கல், வயிற்றுப் புண் முதலியவைகளை வெல்லத்தால் குணப்படுத்துகிறது. வெல்லத்தில் இருக்கும் இரும்புச் சத்து நீக்கி, சொறி, சிரங்கு உள்பட சகல தோல் வியாதிகளையும் நீக்குவதுடன் கண் நோய் குணப்படுகிறது. கருப்பட்டி இரத்தத்தை சுத்திகரித்து, உடலுக்கு சுறுசுறுப்பை கொடுக்கும். மேலும் மேனி பளபளப்பு பெறும். இதில் சுண்ணாம்பைக் கலந்து, உண்டு வந்தால் உடல் சுத்தம் அடையும். குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால், வறட்டு இருமல் தொல்லையும் , நாள்பட்ட சளித்தொல்லையும் நீங்கும். பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத்தால், இடுப்பு எலும்பு வலுப்பெருவதுடன் கருப்பையும் ஆரோக்கியமாக இருக்கும். நீரிழிவு நோயாளிகள் கைக்குத்தல் அரிசி சாதத்துடன் கருப்பட்டியைக் கலந்து உண்டு வந்தால் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருப்பதுடன், அடிக்கடி சிறுநீர் போவதும் குறையும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தொடர்ந்து, வெல்லத்தை உண்டு வந்தால், உடலுக்கு தேவையான கால்சியம் சத்து கிடைக்கிறது. தேநீர் அருந்தும் போது, சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டி பயன்படுத்தி வந்தால், உடலிற்கு சுண்ணாம்புச் சத்தும், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாக கிடைக்கிறது. எலுமிச்சைச் சாறு பிழிந்து அதில் வெல்லத்தை தட்டிப் போட்டு குடித்து வந்தால், உடனடியாக சோர்வு நீங்கி உடல் புத்துணர்ச்சி அடையும். சித்த மருத்துவத்தில் சில வியாதிகளுக்கு மருந்து தயாரிக்க வெல்லத்தைப் பயன்படுத்துவார்கள். பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனையின் போது உடல் சோர்வாகவும் காரணமின்றி படபடப்பாகவும் இருக்கும்; சிலருக்கு தலைசுற்றலும் இருக்கும்; அந்நிலையில் வெல்லம் சாப்பிட சரியாகிவிடும். ஒவ்வாமை மற்றும் ஆஸ்துமா நோய்க்கு வெல்லம் சிறந்த வரப்பிரசாதம். இதை நாள்தோறும் பயன்படுத்தி வர,விரைவில் பயனளிக்கும்.

*🥗தகவல்📩 களஞ்சியம் 👩‍🍳*

*பகிர்வு*

*┈┉┅━❀•ℙᏉᎫℙ•❀━┅┉┈​​​​​​​​​​*

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.