காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் குறுக்கு வழியில் குறிப்பாக ராஜஸ்தான் மாநிலத்தில் ஆட்சியை கவிழ்க்கும் சதியில் மத்திய அரசு ஈடுபடுவதாக கூறி தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
கிண்டியில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.