கொரோனா கோவிட் -19 நிவாரணம். பாரத ஸ்டேட் வங்கி, சென்னை மண்டலம் – 1 மூலமாக ஏழைகளுக்கு உதவி.

கொரோனா கோவிட் -19 நிவாரணம். பாரத ஸ்டேட் வங்கி, சென்னை மண்டலம் – 1 மூலமாக ஏழைகளுக்கு உதவி.

 

கொரோனா கோவிட் -19 நிவாரணம். பாரத ஸ்டேட் வங்கி, சென்னை மண்டலம் – 1 மூலமாக ஏழைகளுக்கு உதவி.

சென்னை புதுப்பேட்டை தெற்கு கூவம் சாலையில் அமைந்துள்ள குடிசைவாழ் மக்களுக்கு பாரத ஸ்டேட் வங்கி சென்னை மண்டலம் – 1 மூலமாக கொரோனா கோவிட் – 19 அத்தியாவசிய பொருட்களான அரிசி மற்றும் மளிகைப்பொருட்கள் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டது.

மேலும் எழும்பூர் பகுதிநடைபாதையில் வாழும் 200க்கும் மேற்பட்ட மக்களுக்கு எழும்பூர் இரயில் நிலையம் எதிரில் கென்னட் லேன் பகுதியில் அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன. இப்பகுதி மக்கள் முகக்கவசம் அணிந்து சீரான தனி நபர் இடைவெளி கடைபிடித்து நிவாரணப் பொருட்களை பெற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பாரத ஸ்டேட் வங்கியின் சென்னை மண்டலம் – 1 துணைப்பொதுமேலாளார் (DGM -B&O) ஏ.ஜி.கே.சத்தியபிரகாஷ் , சென்னை மண்டலம் – 2 துணை பொதுமேலாளார் (DGM -B&O) அதுல் ஸ்ரீவத்சவ், சென்னை மண்டலம் – 1 பகுதி-2 துணை பொதுமேலாளார் (DGM, Region -2) எஸ்.ரவிச்சந்திரன் மற்றும் மண்டல , பகுதி வங்கி அதிகாரிகள் கலந்து கொண்டு நிவாரண உதவிகளை வழங்கினர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.