தலித் மக்கள் முன்ணனி கட்சியின் தலைவர் நெல்லை மணி அவர்களின 50வது பிறந்த நாளில் 1000 பேருக்கு அறுசுவை உணவு வழங்கினார்..
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கினால் ஏழைகள், தினக்கூலிகள் உள்ளிட்ட பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் உணவின்றி தவிக்கும் அவர்களுக்கு அரசு சார்பிலும், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனத்தினர் சார்பிலும் பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தலித் மக்கள் முன்ணனி கட்சியின் சார்பில் சென்னை சூளைமேடு அண்ணா நெடும்பாதையில் அமைந்துள்ள தலித் மக்கள் முன்ணனி தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் நிறுவனத் தலைவர் நெல்லை மணி அவர்களின் 50வது பிறந்த நாளை முன்னிட்டு ஞாயிறு (10.05.2020 )அன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரையில் ஏழை, எளியோர் , நலிவடைந்த மக்களுக்கு என 1000 பேருக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டன . மேலும் வியாழக்கிழமை(7.05.2020) 300 பேருக்கு அத்தியாவசிய பொருட்களான அரசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன. இதனை தொடர்ந்து , வெள்ளி,சனி (8.05.2020, 9. 05.2020 ) ஆகிய கிழமைகளிலும் தலா 300 பேருக்கும் வழங்கப்படன . மேலும் கிருமி நாசின், முகமூடிகள் தலித் மக்கள் குடியிருப்புகளில் இலவசமாக வழங்கப்பட்டன. அரசின் கேரோனா ஊரங்கு உத்தரவு நீடித்தால் மேலும் அத்தியாவசிய உதவிகள் தலித் மக்கள் முன்ணனி கட்சியின் மூலம் வழங்கப்படும் தலைவர் நெல்லை மணி தெரிவித்தார்.