வெளவால்களை அழிக்க சதி
இந்த வவ்வால்களினால் நன்மை தான் அதிகமாக இருக்கு. நிச்சயமாக தீமை இல்லை. வைரஸ் நோய் இதில் இருந்து வந்தது என்பது முற்றிலும் ஜோடிக்கப்பட்ட பொய். …. இன்றும் வவ்வால்கள் கறி மருந்துக்காக சமைத்து சாப்பிடும் வழக்கம் காட்சிகள், சில நாட்டில் உள்ளது… அப்படித் தீமை என்றால் வவ்வால்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் வாழும் மக்கள் உயிரோடிருப்பது எப்படி சாத்தியம்??… இந்நேரம் எல்லாரும் இறந்தல்லவா போயிருக்கணும்.
முதலில் வவ்வால் பற்றி பார்க்கலாம்.
இவை முக்கியமாக மனிதர்களுக்கு ஊறுவிளைவிக்கக்கூடிய பூச்சி, கொசு, வண்டு,சிறு உயிரினம் மற்றும் ஈக்களை தங்கள் முக்கிய உணவாக உட்கொள்கின்றன.
வவ்வால்கள் காலணியாக (கூட்டமாக) வாழக்கூடியது. இந்த வவ்வால்களின் ஒரு காலணி (கூட்டம்) ஒரே இரவில் டன் கணக்கில் பூச்சி, வண்டு மற்றும் கொசுக்களை தங்கள் உணவாக உண்ணுகின்றன. ஒரு சிறிய பழுப்பு நிற வவ்வால் (Little brown bat) ஒரு மணி நேரத்தில் 600 கொசுக்கள் வரைப் பிடித்து உண்ணக்கூடியவை.
மேலும் இவைகள் தங்கள் உணவாக பழங்களான வாழை, மாம்பழம், கொய்யா, பேரிச்சை, அத்தி ஆகியவற்றை உண்கிறது. வவ்வால்களின் மூலம் 500 க்கும் மேற்பட்ட தாவரங்களின் அயல் மகரந்தச்சேர்க்கை நடைபெறுகிறது.மேலும் இவற்றின் கழிவுகளில் மிக அதிக அளவிற்கு நைட்ரஜன் மற்றும் பாஸ்பரஸ் உள்ளதால் மிகச்சிறந்க உரமாக பூமிக்கு அமைந்துவிடுகின்றன. பறவை கழிவுகள் மூலம் பழத்தின் விதைகள் காட்டின் எல்லா இடங்களிலும் பரவி புதிய காடு தானாகவே தோன்றுகிறது .
வவ்வால்களின் வாயில் சுரக்கும் உமிழ் நீரிலிருந்து மனிதர்களுக்கு ஏற்படும் இதய சம்பந்தமான நோய்க்கு மருந்து தயாரிக்கப்படுகின்றது. மேலும் மூளைக்கு செல்லும் இரத்தம் தடைப்படுவதை தடுக்கவும் காயங்களிலிருந்து வெளியேறும் இரத்தத்தை விரைவில் உறைய வைக்கவும் இவை பயனாகின்றன.
சரி …இப்போது கொரோனா வைரஸ் முக்கியமாக வௌவால்கள் மூலம் பரவும் என சிலவற்றில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவும் பொய்தான். மீடியாக்கள் கையில் இருப்பதால் பொய் வேகமாக பரவுகிறது. உண்மைகளை ஆதாரபூர்வமாக பொது வெளியில் விவாதத்துடன் வையுங்கள். சரியாக இருந்தால் ஏற்று கொள்கிறோம். அதை விடுத்து யாரோ வாய் வழி சும்மா கூறுவதை எங்கள் செவிக்குள் ஏற்ற பார்க்காதீர்கள்.
இப்போது என்ன நடக்கும் …….?
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கிறேன் என்ற பெயரில் வவ்வால்கள் கொத்து கொத்தாக கொன்று குவிக்கப்படும்.
ஒரு காலத்திற்கு மேல் வவ்வால்கள் பெருமளவு குறைந்து விடும். அப்போது கொசுக்கள் வரைமுறை இல்லாமல் பெருகும். இதனால் நோய்கள் பெருகும் .
அயல்மகரந்த சேர்க்கை குறையும். தீய பூச்சிகளின் எண்ணிக்கை பெருகி பயிர் உற்பத்தி பாதிக்கும். காட்டில் பல வருடங்களாக வசித்து வரும் எந்த விலங்கிற்கும் கொரோனா இதுவரை வந்ததும், பரவியதும் இல்லை.
இதனால் கார்பெரேட் கம்பெனிகளுக்கு கொண்டாட்டம். விதவிதமான கொசுவர்த்திகள் பெருகும். நல்ல லாபம். உணவு பொருள்களை இறக்குமதி செய்யலாம். நல்ல லாபம். பல்வேறு நோய்கள் பெருகும். மருந்து கம்பெனிகளுக்கு லாபம்.
கார்பரேட் சரியாக வருமான காய் நகர்த்துகிறான்.. புரிந்துகொள்ளுங்கள்
இயற்கை எல்லாவற்றையும் சரியாக செய்து வந்து இருக்கிறது. எங்கள் ஊரில் நான் சிறுவனாக இருக்கும்போது பெரிய வவ்வால் சாப்பிட்டால் வீசிங்கிற்கு நல்லது என்று எனக்கு தெரிந்த நபர் கூட பிடித்து சாப்பிட்டு இருக்கிறார். இன்று வரை நல்லா இருக்கிறார்.
உணவு சங்கிலியில் எந்த உயிரியும் தீங்கானது அல்ல.