காந்தியம்மாள்தியம்மாள் அகில இந்திய குடிமைப் பணி தேர்வுக்கான இலவச பயிற்சி மையம் திறப்பு விழா.
தமிழகத்திலிருந்து அதிக அளவில் மாணவ மாணவிகள் அகில இந்திய குடிமைப்பணி தேர்வில் கலந்து கொள்ள வழி செய்யும் உயரிய நோக்கத்தில் காந்தி அம்மாள் அகடமி (Gandhiammal IAS Academy) என்ற பெயரில் பயிற்சி மையம் நுங்கம்பாக்கம் ( முரசொலி அலுவலகம் அருகில் தொடக்க விழா நடைபெற்றது.
இத்தொடக்க விழாவில் சென்னை பல்கலைக்கழக பேராசிரியர் ஏழுமலை ,ஓய்வுபெற்ற ஐ .ஏ. எஸ் அதிகாரி பழனிகுமார் சென்னை வரித்துறை தலைமை ஆணையர் ரங்கராஜ் (ஐ .ஆர் .எஸ் )முனைவர் , ஓய்வுப்பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி ராம சுப்பிரமணி, முனைவர் பாண்டியன் ஐ. ஆர் .எஸ் , கரு. நாகராஜன் மற்றும் கல்வி ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.