லீஃப் ஃபெர்டிலைசர் மூலம் அன்னிய செலாவணி இழப்பீட்டை தடுக்கலாம். அரசுக்கு உபரி நிதி ஆதாயம் கிடைக்கும்.

லீஃப் ஃபெர்டிலைசர் மூலம் அன்னிய செலாவணி இழப்பீட்டை தடுக்கலாம். அரசுக்கு உபரி நிதி ஆதாயம் கிடைக்கும்.

 

லீஃப் ஃபெர்டிலைசர் மூலம் அன்னிய செலாவணி இழப்பீட்டை தடுக்கலாம். அரசுக்கு உபரி நிதி ஆதாயம் கிடைக்கும்.

சென்னை :
நமது நாட்டின் உரங்கள் இறக்குமதி மூலம் ஏற்படும் ரூபாய் ஒரு இலட்சம் கோடி அன்னியச் செலவாணி இழப்பீட்டைத் தவிர்க்கலாம் என்று லீஃப் பெர்ட்டிலைசர்ஸ் நிர்வாக இயக்குநர் அப்துல் ஹக்கீம் தெரிவித்தார்.

இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் விவசாயம் நலிந்து வருகிறது. இதற்கு பருவநிலை மாற்றங்கள் ஒரு காரணமாக இருந்தாலும் மண்ணுக்கேற்ற உரம் பயன்பாடு இல்லாததே முக்கிய காரணமாகிறது. லீஃப் கனிம உரத்தின் மூலம் நல்ல மகசூலை விவசாயிகள் பெற முடியும் என்று பல்வேறு சோதனைகள் மூலம் மெய்பித்து சாதனை படைத்துள்ளது.

உரங்கள் இயற்கை உரம் , செயற்கை உரம், கனிம உரம் என மூன்று தயாரிப்பு வகைகளை கொண்டது.
முதலாவது இயற்கை உரமானது தொழு உரம் , தழை உரம் வகையை சார்ந்தது. இரண்டாவது வேதிப் பொருட்களிலான செயற்கை உரம், மூன்றாவது பாஸ்பேட் பாறைகளில் இருந்தும் , மற்ற கனிம வகை ளிலிருந்தும் இயற்கையாக கிடைக்கும் பொருள்களிலிருந்தும் தாதுக்களைக் கொண்டு கனிம உரங்கள் தயாரிக்கப்படுகின்றன.

இந்த வகையான கனிம உரங்களை விவசாயத்திற்கு பயன்படுத்தும் போது மண்ணின் வளம் மேம்படும் .
மேலும் விளைச்சல் பெருகி விவசாயிகளுக்கு நல்ல பலன் கொடுக்கும்.

குறிப்பாக உள்நாட்டில் தயாரிக்கும் உரம் என்பதால் , நம் நாட்டில் அதை பயன்படுத்தும் போது வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்கின்ற உரங்களின் அளவு குறையும்.
இதன் மூலமாக இந்திய அன்னிய செலாவணி இழப்பு குறையும்.
இதன் வாயிலாக இந்திய ரூபாயின் மதிப்பு உயரும் .
விவசாயத்திற்கு இந்திய அரசு ரூ . 1 இலட்சம் கோடி மானியமாக நிதியை ஒதுக்குகிறது. உள்நாட்டு தயாரிப்பு உரங்களுக்கு அரசு முக்கியத்துவம் கொடுக்கும் பட்சத்தில்
இதன் மூலம் அரசுக்கு உபரி நிதி ஆதாயம் கிடைக்கும் என்று லீஃப் ஃபெர்டிலைசர் நிர்வாக இயக்குநர் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.