எச்.ஆர்.ஓ அமைப்பு சார்பாக சமத்துவ பொங்கல் விழா . பிரான்ஸ் நாட்டு சுற்றுலா பயணிகளுடன் கொண்டாட்டம்.

எச்.ஆர்.ஓ அமைப்பு  சார்பாக சமத்துவ பொங்கல் விழா . பிரான்ஸ் நாட்டு  சுற்றுலா பயணிகளுடன் கொண்டாட்டம்.

 

சென்னை ஜன:12.

 

#Samathuvapongal  #Hro  #Sahanjeevi

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையினை பிரான்ஸ் நாட்டிலிருந்து காண வந்திருந்த வெளிநாட்டு தம்பதிகள் மற்றும் பல்வேறு மதத்தை சார்ந்தவர்களுடன் இணைந்து சமத்துவ பொங்கலிட்டு சிறப்பாக கொண்டாடிய சர்வதேச மனித உரிமை அமைப்பினர்…

எச்.ஆர்.ஓ சர்வதேச அமைப்பின் சார்பாக தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையாகவும் உழவர்களை போற்றும் விதமாக கொண்டாடப்படும் பொங்கல் திருநாளினை சிறப்பாக கொண்டாடும் விதமாக சமத்துவ பொங்கல் விழாவாக சென்னையிலுள்ள அதன் செயல் அலுவலக வளாகத்தில் ஏற்பாடு செய்திருந்தனர்…

அந்த அமைப்பின் தலைவர் Dr.எம்.ஆர்.சஞ்சிவி தலைமையில் நடைபெற்ற இந்த சமத்துவ பொங்கல் விழாவில் இந்து, இஸ்லாமிய, கிருத்துவ உள்ளிட்ட பல்வேறு மதம் மற்றும் மார்கங்களை சார்ந்தவர்கள் சாதி மத மேதமின்றி புதுப்பானையில் பொங்கலிட்டு  சூரியனுக்கு நன்றி தெரிவித்து வணங்கினர்.

மேலும் இந்த சமத்துவ பொங்கல் விழாவில் அவ்வமைப்பை சார்ந்த முக்கிய தலைவர்கள் மகளிர் அமைப்பை சார்ந்த முக்கிய நிர்வாகிகள், அயல் நாட்டிலிருந்து பொங்கல் விழாவை காண வந்திருந்த வெளிநாட்டு தம்பதியினர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு சமத்துவ பொங்கலிட்டு பொங்கல் பண்டிகையினை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர்….

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.