ஏழாம் ஆண்டு ஆங்கில இலக்கிய விழா .

ஏழாம் ஆண்டு ஆங்கில இலக்கிய விழா .

 

ஏழாம் ஆண்டு ஆங்கில இலக்கிய விழா

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பஷீர் சையத் மகளிர் கல்லூரியில் ஏழாம் ஆண்டு இலக்கிய விழா இறுதி நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.

சென்னை ஆங்கில இலக்கிய சங்கம் சார்பாக நடத்தப்படும் இந்த இலக்கிய விழாவானது கோலாகலமாக 45 கல்லூரிகளில் நடைபெற்றது. இறுதிநாளான இன்று பல்வேறு கல்லூரிகளில் நடத்தப்பட்ட ஆங்கில இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு வெற்றி சான்றிதழ் மற்றும் பரிசு தொகை வழங்கப்பட்டது. இந்த இலக்கிய போட்டிகள் கட்டுரை, கவிதை ,பேச்சுப்போட்டி ஆகியவை ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் நடத்தப்பட்டது.

இந்த சிறப்பு இலக்கிய நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுந்தரேஷ் கலந்துகொண்டார். மேலும் இந்த நிகழ்ச்சியில் ஆங்கில இலக்கிய சங்கத்தின்
தலைவர் சுதாகர் , செயலாளர்
சையது ஹாசன் கல்லூரி முதல்வர் டாக்டர் ஷானாஸ் அஹமத், சென்னை பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் ஆம்ஸ்ட்ராங் . உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

பின்னர் பேட்டியளித்த ஆங்கில இலக்கிய சங்கத்தலைவர் சுதாகர்,

இந்த இலக்கியத் திருவிழா ஏழாம் ஆண்டாக ஆங்கில இலக்கிய நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சி மிகவும் வெற்றிகரமாக அனைத்து கல்லூரிகளிலும் நடத்தப்பட்டு தற்பொழுது வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட்டன தற்பொழுது மாணவர்களிடையே புத்தகங்களைப் வாசிப்பதற்கான ஆர்வம் குறைந்து வருகிறது அதனை ஊக்குவிக்கும் வண்ணமாகவும் மாணவர்கள் சமூக வலைதளங்களை உபயோகிப்பதை குறைக்கும் விதமாகவும் குறிப்பாக இந்த நிகழ்ச்சி மாணவர்களின் தலைமைப்பண்பு ,
படைப்பாற்றல் ஆகியவற்றை வளர்ப்பதற்கான இது போன்ற நிகழ்ச்சிகள் மாணவர்களிடையே நடத்தப்படுகிறது .தொடர்ந்து இது போன்ற நிகழ்ச்சிகள் தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகளில் நடத்தப்படவேண்டும்

இந்த ஆண்டு நடைபெற்ற இலக்கிய நிகழ்ச்சிகள் 10,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று இருக்கிறார்கள்

ஆங்கில இலக்கிய சங்கத்தின் செயலாளர் சையத் ஹாசன் பேட்டி:

மாணவர்களின் ஆங்கில கற்றல் திறனை அதிகரிக்கும் வகையிலும் மாணவர்களுக்கு சமூக வலைதளங்களில் தங்களது பொன்னான நேரங்களை செலவிட்டு வீணடிக்கிறார்கள் .அவர்களை இதுபோன்ற இலக்கிய நிகழ்ச்சிகள் நடத்தப்படும் போது மாணவர்கள் ஆர்வத்தோடு பங்கேற்று அவர்களின் கற்றல் திறன் அதிகரிக்கும்.

இந்த ஆண்டு சென்னை புத்தக திருவிழாவும் இலக்கிய திருவிழாவும் ஒரேநேரத்தில் நடைபெறுவது அரிதானது .தற்போது இரண்டும் ஒரே நேரத்தில் நடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. மாணவர்கள் இதனை பயன்படுத்தி புத்தக வாசிப்பினை மென்மேலும் வளர்க்க வேண்டும் எனக் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.