சென்னை வடபழனி போர்ட்டீஸ் மருத்துவமனையில் நடைபெற்ற சவாலான ரேடோ தையலற்ற பெருந்த மணி தடுக்கிதழ் மாற்று அறுவை சிகிச்சைக்கு பின் 68 வயது விவசாயி புத்துயிர் கிடைத்தது.
கால்சியம் படிந்த பெருந்தமணி தடுக்கிதழ் காரணமாக கடுமையான பெருந்தமனி ரத்தமான நாள குறுக்கம் ஏற்பட்டதால் அவர் ஏற்கனவே 2007 ஆம் ஆண்டு பெருந்த மணி தடுக்கிதழ் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார் .
நோயாளியின் உயிரைக் காப்பாற்ற அறுவை சிகிச்சை மூலம் இவருக்கு உயிரி செயற்கை தடுக்கிதழ் பொருத்தப்பட்டது .
காலப்போக்கில் அதில் கால்சியம் அதிகம் சேர்ந்ததால் தடுக்கிதழ் சிதைந்து குறுகியதால் உடனடி சிகிச்சை அளிக்காவிட்டால் உயிருக்கு ஆபத்து என்ற நிலை ஏற்பட்டது .
நோயாளி மூச்சு விட சிரமப்படவே 2021 நவம்பரில் சென்னை வடபழனி போர்ட்டீஸ் மருத்துவமனையின் இதயம் மற்றும் நுரையீரல் மாற்றம் அறுவை சிகிச்சை பிரிவு தலைவர் சி டி விஎஸ் டாக்டர் கோவினி பாலசுப்ரமணியின் கண்காணிப்பில் அனுமதிக்கப்பட்டார் .
பரிசோதனையில் காரை படிந்த பெருந்தமணி ரத்த நாளக்குறுக்கம் மற்றும் இதயத்தின் பெருந்தமனி தடுக்கிதழ் இறுக்கமாக மூடிக்கொள்ளாமை ஆகியவையே என உறுதி செய்யப்பட்டன .
இதன் காரணமாக இதயத்திலிருந்து இடது கீழறையிலிருந்து ஏற்பட்ட குருதி ஓட்டம் பின்னோக்கி கசிய தொடங்கியது .
அறுவை சிகிச்சை விவரங்களைடாக்டர் கோவினி விளக்கினார்.
நோயாளிக்கான பல்வேறு சிகிச்சை வாய்ப்புகளை ஆய்வு செய்தோம் டிஏ வி ஐ (செருகு வடிகுழாய் பெருந்தமனி தடுக்கிதழ் மற்றும் அறுவை சிகிச்சை அதாவது சிதைந்த தடுக்கிதழை அகற்றாமல் அதற்குள்ளே புதிய தடுக்கிதழை சொருகும் ) அறுவை சிகிச்சையும் பரிசிலிக்கப்பட்டது .
ட்ரான்ஸ் ஈசோஃபேகியல் எக்கோ பரிசோதனையின் போது மருத்துவர் குழு இன்னொரு சவாலை சந்தித்து சந்தித்தது .
இயல்பான நிலையில் 21 மில்லி மீட்டர் இருக்க வேண்டிய நோயாளியின் பெருந்தமணி தடுக்கிதழ் 20 மில்லி மீட்டருக்கும் குறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விரிவடையும் போது பெருந்தமணி தடுக்கிதழ் உறுதி பலவீனமோ , சேதமோ ஏற்படும் அபாயம் நிகழலாம் .எனவே அபாயம் அடையும் சாத்தியங்கள் அனைத்தையும் கருத்தில் கொண்டு ரேடோ தையலற்ற பெருந்தமணி தடுக்கிதழ் மாற்று அறுவை சிகிச்சை அளிக்க முடிவு செய்தோம் என்றார்.