அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு ஆயுள் சிறைவாசிகள் விடுதலை செய்ய வேண்டும் . பாராபட்சம் பாராமல் மற்ற கைதிகளைப் போன்று கருணை அடிப்படையில் முஸ்லிம் சிறைவாசிகளையும் 6 தமிழர்களுக்கும் விடுதலை சாத்தியமாக்க வேண்டும்

சென்னை ;
எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை எஸ்.டி.பி.ஐ தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது . எஸ். டி .பி .ஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் செய்திகளிடம் கூறியதாவது ;
வருகின்ற அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு ஆயுள் சிறைவாசிகள் விடுதலை செய்ய வேண்டும் . பாராபட்சம் பாராமல் மற்ற கைதிகளைப் போன்று கருணை அடிப்படையில் முஸ்லிம் சிறைவாசிகளையும் 6 தமிழர்களுக்கும் விடுதலை சாத்தியமாக்க வேண்டும் என்கிற ஒற்றைக் கோரிக்கையை முன்வைத்து செப்டம்பர் 8ஆம் தேதி அனைத்து ஜனநாயக சக்திகளையும் அணி திரட்டி பல்லாயிரக்கணக்கான மக்களுடன் சட்டமன்றம் நோக்கி மாபெரும் கருஞ்சட்டை பேரணி எஸ். டி .பி .ஐ நடத்தும் .
அரசியல் தலைவர்கள் சமூக ஆர்வலர்கள் மற்றும் மனித உரிமை போராளிகள், ஊடகவியலாளர்கள் , அறிவு ஜீவிகள் போன்றோரை அச்சுறுத்தும் வகையில் அரசுகள் செயல்படுவதை எஸ்.டி.பி.ஐ கண்டிக்கின்றது .
அரசியலமைப்பு சட்டம் வழங்கிய உரிமைகளும் மறுக்கப்படுகின்றன.
இதற்கான வெகுஜன பிரச்சார இயக்கம் தொடங்கப்படும்.
மாநில எஸ்.சி , எஸ்.டி ஆணையத்திற்கு இதுவரை பணியாளர்களை நியமிக்க வில்லை . மாநில அளவில் ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினரின் சட்டபூர்வமான உரிமைகளை பாதுகாக்கவும் அவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும் தமிழ்நாடு மாநில எஸ். சி , எஸ். டி ஆணையம் என்கிற புதிய அமைப்பை தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்படும் வகையில் தமிழக அரசு அமைத்தது .
தமிழ்நாடு அரசு எஸ்.சி , எஸ்.டி ஆணையம் அமைக்கப்பட்டு ஏறக்குறைய 10 மாதங்கள் ஆன பின்பும் அந்த ஆணையத்திற்கு இன்னும் பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை .
எந்த நோக்கத்திற்காக ஆணை அமைக்கப்பட்டதோ அதனை நடைமுறைப்படுத்த தேவையான அதிகாரிகளை நியமித்து அதற்கான நிதியை தமிழக அரசு உடனடியாக ஒதுக்க வேண்டும் .
பரந்தூர் விமான நிலைய திட்டம் மக்கள் கருத்துக்களை கேட்க வேண்டும் . மக்கள் மீதும் , சமூக ஆர்வலர்கள் மீதும் அடக்கு முறையை கைவிட வேண்டும். புதிய விமான நிலையம் அமைவதால் தொழில் வளர்ச்சி அதிகரிக்கும் எனவும் வேலை வாய்ப்புகள் உருவாகும் எனவும் அரசு கூறும் நிலையில் ஏற்கனவே உள்ள விவசாய நிலங்களை அழித்து தொழில்துறை உருவாக்க வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது.
அரசுத்துறைகளில் காலி பணியிடங்களை ரத்து செய்ய முடிவை கைவிட வேண்டும் .
சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்தை தமிழக அரசு ஒருபோதும் செயல்படுத்தக் கூடாது என்று தெரிவித்தார். மேலும் பத்திரிகை சந்திப்பின் போது மாநிலத் துணைத் தலைவர் அப்துல் ஹமீத் , மாநில பொதுச் செயலாளர்கள் உமர் ஃபாரூக், அகமது நவ்வி , நிஜாம்முகைதீன், மாநில அமைப்பு செயலாளர் நஸுருதீன், மாநிலச் செயலாளர் ரத்தினம், அபூபக்கர் சித்திக் , ஏ. கே. கறீம் , நஜ்மா, மாநில பொருளாளர் ஹமீது அம்சா மற்றும் மானிய செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Social media & sharing icons powered by UltimatelySocial
WhatsApp