உலககோப்பை கபடி போட்டியில் இந்தியா ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவு இரண்டிலும் தங்கம் வென்றது.

உலககோப்பை கபடி போட்டியில் இந்தியா  ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவு இரண்டிலும் தங்கம் வென்றது.

 

#Newkabaadifedaration #Worldcup #Makkalnanayam மலேசியாவில் நடைபெற்ற உலககோப்பை கபடி போட்டியில் இந்தியா ஈராக் தைவான் எகிப்த் ஆஸ்திரேலியா மற்றும் கென்யா உட்பட 40 நாடுகள் இதில் பங்கேற்றன ஆண்கள் பிரிவில் 32 அணிகளும் மற்றும் பெண்கள் பிரிவில் 18 அணிகளும் பங்கேற்றனர்,

இந்தியா சார்பாக பங்கேற்ற நியூ ஃபெடரேசன் கபடி அணி ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் பட்டம் வென்றது. வெற்றி பெற்ற வீரர்களுக்கான பாராட்டு விழா சென்னை எழும்பூரில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ராமன், காவல்துறை டிஐஜி ரவி உட்பட பலர் பங்கேற்றனர். கோப்பையை வென்று வந்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு நினைவுப் பரிசு வழங்கி பாராட்டப்பட்டது,

இந்திய ஆண்கள் கபடி அணி ஈராக்கை எதிர்கொண்டு 56-25 கணக்கில் வீழ்த்தி உலக கோப்பையை கைப்பற்றியது,

இதேபோன்று பெண்கள் பிரிவில் இந்திய அணி வீராங்கனைகள் இறுதிப் போட்டியில் தைவான் எதிர்கொண்டு 47 -29 என்ற கணக்கில் வீழ்த்தி உலக கோப்பையை கைப்பற்றியது,

நியூ கபடி ஃபெடரேசன் தலைவர் பிரசாந்த் பாபு நிகழ்ச்சியில் பேசுகையில், 2022ம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் கபடி இடம் பெறுவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் இன்னும் 2 மாதத்தில் இந்திய கபடி சங்கத்திற்கான தேர்தல் வரவுள்ளதககாவும் நிச்சயமாக அந்த தேர்தலில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்றார்.

இந்திய கபடி சங்கத்தில் நடைபெற்ற நிர்வாக சீர்கேடுகள் காரணமாகவே இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டதாகவும் அதன் காரணமாகவே தற்போது இரண்டு கபடி சங்கங்கள் இந்தியாவில் செயல்படுவதாக கூறினார்.

தொடர்ந்து பேசிய டிஐஜி ரவி ,
இந்திய வீரர்கள் உலகக்கோப்பையை வென்று வந்திருப்பதன் மூலம் கபடி மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளதாக கூறினார்.

நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆடவர் அணி கேப்டன் ஆறுமுகம், அணியில் தலைசிறந்த வீரர்கள் இடம்பெற்றிருந்ததாகவும் போட்டியின் போது தேசிய கீதம் பாடப்பட்டபோது கோப்பையை வெல்ல வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டதாக கூறினார். மலேசிய மண்ணில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார் . சென்னை திரும்பியவுடன் அளிக்கப்பட்ட வரவேற்பு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதாகவும் அணியில் இடம்பெற்ற தமிழக வீரர்களான தன்ராஜ் மற்றும் அம்பேஷ்வரன் இருவரும் வேலையில்லாமல் இருப்பதாகவும் அவர்களுக்கு வேலை வழங்க தமிழக அரசு ஆவண செய்ய வேண்டும் என ஆறுமுகம் கோரிக்கை விடுத்தார்.

உலகக்கோப்பை கபடி தொடர் மலேசியாவில் ஜூலை 20 முதல் 28ம் தேதி வரை நடைபெற்றது. ஆடவர் இறுதி போட்டியில் இந்திய அணி ஈராக்கையும், மகளிர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்திய அணி தைவானையும் வீழ்த்தி பட்டம் வென்றது.

Makkal Nanayam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.