கடந்த 25 ஆண்டுகளாக வெற்றிகரமாக சேலத்தில் செயல்பட்டுவரும் மருத்துவமனையின் சென்னை கிளை ஃபவுண்டேஷன் மருத்துவமனை சென்னை அசோக் நகர் பகுதியில் திறப்பு விழா

கடந்த 25 ஆண்டுகளாக வெற்றிகரமாக சேலத்தில் செயல்பட்டுவரும் மருத்துவமனையின் சென்னை கிளை ஃபவுண்டேஷன் மருத்துவமனை சென்னை அசோக் நகர் பகுதியில் திறப்பு விழா நடைபெற்றுள்
இம்மருத்துவமனையை துளுவ வேளாளர் சங்க தலைவர் கே பி கே செல்வராஜ் , தமிழ்நாடு தகவல் ஆணையர் பிரதாப் குமார் , காவல்துறை துணை ஆணையர் அசோக்குமார், அப்போலோ மருத்துவமனை மருத்துவர் விஜயகுமார் ஆகியோர் ஒவ்வொரு பிரிவையும் திறந்து வைத்தனர்.
மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் முத்துக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
இங்கு உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை யளிக்கும் விதத்தில் பல உயர்தர சிகிச்சைக்கான நவீன மயமான உபகரணங்கள் பயன்படுத்தப்படுகின்றன .
மேலும் இம்மருத்துவமனைக்கு வெளிநாடுகளிலிருந்தும் மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் ஆண்கள் பெண்கள் என இருபாலருக்கும் குழந்தைப் பேரின்மைக்கான சிகிச்சை அளித்து 70% பாசிட்டிவ் முடிவுகள் தந்துள்ள ஒரே மருத்துவமனை சிசு மருத்துவமனையாகும். அதேபோல் கொரோனா காலத்தில் அரசு வழிகாட்டுதலை கருத்தில் கொண்டு , அதை பின்பற்றி , இங்கே சிகிச்சை பெற வருபவர்களுக்கு தகுந்த முறையில் போதுமான பாதுகாப்பு நடவடிக்கையை செய்கிறோம் . இவ்வாறு நிர்வாக இயக்குனர் டாக்டர் முத்துக்குமார் தெரிவித்தார் மருத்துவ இயக்குனர் டாக்டர் உமா பாரதி உடனிருந்தார்.
Makkal Nanayam

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Social media & sharing icons powered by UltimatelySocial
WhatsApp