ப்பள்ளிகள் மீது அரசு பள்ளிகள் மீது அவதூறு பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்.

மாநிலத்தலைவர்
பி.கே.இளமாறன்
அறிக்கை.

[4/26, 09:06] Teachers ILA Maran: அரசுப்பள்ளிகள் மீதுஅவதூறு பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்.
மாநிலத்தலைவர்
பி.கே.இளமாறன்
அறிக்கை.
இந்தியாவிற்கே முன்மாதிரி மாநிலமாக,குறிப்பாக. கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளித்து அதிக நிதி ஒதுக்கீடு செய்து பல்வேறு திட்டங்கள்அறிவித்து அரசுப்பள்ளிகளையும் மாணவர்களையும் மேம்படுத்தும் நோக்கத்தோடு மாண்புமிகு. முதலமைச்சர் செயல்பட்டுவருகிறார்.
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் தொடர்ந்து பொறியியல் கல்லூரியிலும் 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கியது பெண்கல்வி ஊக்குவிக்கும் வகையில் ஏழை,எளிய குடும்பங்களிலிருந்துதான் பெரும்பாலோர் அரசுப்பள்ளிகளில் படிக்கிறார்கள் என்பதை உணர்ந்து அரசுப்பள்ளியில் படித்து உயர்கல்வித்தொடரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 போன்ற அறிவிப்பின்மூலம் அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் குவிந்தவண்ணம் உள்ளனர்.எதிர்காலத்தில் அனைத்திலும் முதன்மைப்பெறப்போகிறவர்கள் அரசுப்பள்ளியில் படித்தவர்களாகத்தான் இருப்பார்கள்.
கடந்த ஆண்டில் மட்டும் ஐந்தரை லட்சம் புதிய மாணவர்கள் சேர்ந்தார்கள். எதிர்வரும் ஆண்டில் இருமடங்காக உயரும் நிலை உருவாகும்.
நிலைமை இவ்வாறிருக்க சமீபகாலமாக சமூகவலைதளங்களில் அரசுப்பள்ளிகளையும் அங்கு படிக்கும் மாணவர்களை தவறான செய்கையில் ஈடுபடுவது போன்று வீடியோ எடுத்து பரப்பிவருவதன்மூலம் அரசுப்பள்ளிகளையும் மாணவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாக்கும் வகையில் ஈடுபடுவோர் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கேட்டுக்கொள்கிறேன். மேலும் கொரோனா ஏற்படுத்திய தாக்கம் எங்கோ ஒரு சில மாணவர்களின் செயல் வருந்தத்தக்கது. அம்மாணவர்களை நாங்கள் மீண்டும் நல்லநிலைக்கு கொண்டுவந்துவிடுவோம். ஆனால் அதை வீடியோ எடுத்து பரப்புவதனால் மாணவனின் எதிர்காலமும் கேள்விக்குறியாக்கிவிடுகிறார்கள்.
அரசுப்பள்ளிகள் மீது அவதூறு பரப்பியும் அங்கு படிப்பவர்கள் ஒழுங்கீனமானவர்கள் மாதிரி சித்தரித்து அல்லது தூண்டுதலால் ஒரு சிலரால் திட்டமிட்டு பரப்புகிறார்களோ என்ற அச்சம் ஏற்படுகிறது . மாணவர் சேர்க்கை தொடங்கவுள்ள நிலையில் பெற்றோர்களை அச்சுறுத்தும் வகையில் வீடியோக்கள் வெளியிடுகிறார்கள்.அரசுப்பள்ளிகள் தான் அடிமட்ட மக்களின் அடையாளம். அரசுப்பள்ளிதான் சிறப்பான குடிமகன்களை உருவாக்கும் அறிவாலயம். ஆகையால்,அரசுப்பள்ளிகள் மீது சேற்றை வாரிப்பூசும் வீடியோக்கள் எடுத்து சமூகவலைதளங்களில் பரப்புவோர் மீதும் பகிர்வோர் மீதும் கடுமையாக நடவடிக்கை எடுக்க ஆவனசெய்யும்படி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் மாண்புமிகு. முதலமைச்சர் M. K. Stalin #CMMKStalin #MKStalin #pksekarbabu #AnbilMaheshPoyyamozhi அவர்களை பணிவுடன் வேண்டுகிறேன்.
பி.கே.இளமாறன்
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்.
98845 86716
[5/4, 10:58] Teachers ILA Maran: 10,11,12,ஆம் வகுப்புத் தேர்வுகள் தொடக்கம்.
முயன்றால் முடியாதது எதுவுமில்லை.
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் தமிழ்நாட்டில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு முழுமையாக பொதுத்தேர்வு மே 5 ந்தேதி முதல் தொடங்குகின்றது.
கொரோனா பெருந்தொற்றால் பள்ளிகள் காலத் தாமதமாகத்தொடங்ப்பட்டது.இருப்பினும் மாணவர்களின் நலன்கருதி நம்பிக்கையை ஏற்படுத்தியது. இதுவரை இல்லாத வகையில்
பொதுத்தேர்வுப் போன்று திருப்புதல் தேர்வு நடத்தப்பட்டது.
எவ்விதக் குழப்பமுமின்றி மாணவர்கள் பொதுத்தேர்விற்கு தயாராகியுள்ளார்கள். தன்ம்பிக்கையோடு அணுகும் எச்செயலும் வெற்றியைத்தரும்.
இருப்பினும் தேர்வுக்கு தயாராகும் போதும் பதட்டத்தைத் தவிர்க்கத் தேர்வு மையத்திற்கு அரைமணி நேரத்திற்கு முன்பே செல்லவேண்டும்.
தேர்வு அறையில் வழங்கப்பட்ட விடைத்தாள் எண் தனக்கு ஒதுக்கப்பட்டதுதானா என்பதை உறுதிசெய்தல் அவசியம்.தவறு இருந்தால் உடனடியாக கண்காணிப்பாளரிடம் தெரிவித்து மாற்றிக்கொள்ளவேண்டும். வினாத்தாள் தந்தவுடன் பதட்டப்படாமல் முழுமையாக படித்துப்பார்க்கவேண்டும். திட்டமிடுதல் அவசியம். தேர்வு தொடங்கியவுடன் நன்கு தெரிந்த வினாக்களுக்கு அதற்குரிய எண்ணை எழுதி விடையெழுதவேண்டும். அடித்தல் திருத்தலின்றித் தெளிவாக எழுதவும்.
தேவையான பதிலை சுருக்கமாகவும் வேகமாகவும் எழுதவும்.
பயமின்றி தேர்வு எழுதுங்கள்.
கஷ்டப்பட்டு படிக்காமல் இஷ்டப்பட்டு படித்தால் இன்பம் பெருகும்.
நினைவில் கொள்ளுங்கள்
என்னால் முடியாதது வேறு எவராலும் முடியாது.
வேறு எவராலும் முடியாதது என்னால் மட்டுமே முடியும்.
நம்பிக்கையோடு தேர்வு எழுதச்செல்லுங்கள்.
வெற்றியோடுத் திரும்புவீர்கள்.
முயன்றால் முடியாதது எதுவுமில்லை.
வாழ்த்துகள்.
பி.கே.இளமாறன்
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்
98845 86716

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Social media & sharing icons powered by UltimatelySocial
WhatsApp