தனியார் பங்களிப்புடன் இந்தியாவிலே முதல் ஆன்மீக சுற்றுப்பயணம் .இந்திய ரயில்வேயின் பாரத் கௌரவ் இத்திட்டத்தின் கீழ் கோவையில் இருந்து சீரடி வரை .

தனியார் பங்களிப்புடன் இந்தியாவிலே முதல் ஆன்மீக சுற்றுப்பயணம் .
இந்திய ரயில்வேயின் பாரத் கௌரவ் இத்திட்டத்தின்கீழ் கோயம்புத்தூரில் இருந்து சீரடி வரை .
இந்திய ரயில்வேயின் பாரத் கௌரவ் இத்திட்டத்தின்கீழ் கோயம்புத்தூர் கோயம்புத்தூரிலிருந்து சீரடி வரை ஆன்மீக சுற்றுப்பயணம் இந்திய ரயில்வே துறை அறிவித்துள்ளது.
கோயம்புத்தூரிலிருந்து சீரடிக்கு ஆன்மீக சுற்றுலா பயண அறிவிப்பு பாரத் கௌரவ் திட்டத்தின் கீழ் தனியார் அரசு பங்களிப்புடன் இயக்கப்படும் முதல் ரயில் சேவை இதுவாகும்.
கோயம்புத்தூரிலிருந்து ஈரோடு , சேலம், பெங்களூர், மந்த்ராலயம் வழியாக சீரடிக்கு செல்ல இந்த பயணத்தில் ஒரே கட்டணத்தில் நான்கு நாட்களுக்கான உணவு மற்றும் ரயில் பயணத்திற்கு தேவையான படுக்கை விரிப்புகள் ,தலையணை ,போர்வை ,கிருமிநாசினி உள்ளிட்ட தினசரி பயன்பாட்டு பொருட்கள் சீரடியில் போக்குவரத்து வசதி, வியாழக்கிழமை சாய் தரிசனம் , தரிசன கட்டணம் என அனைத்தும் நிர்வாகத்தால் வழங்கப்படும் .
இரண்டடுக்கு ஏசி மற்றும் உயர்தர வசதிகளைக் கொண்ட இந்த வாராந்திர ரயில் பயணம் செவ்வாய்க்கிழமை காலை தொடங்கிய வெள்ளிக்கிழமை மாலை முடிவடையும் . பயணிகள் கோயம்புத்தூர் ,திருப்பூர் ,ஈரோடு , சேலம் ,பெங்களூர் ஆகிய இடங்களை ஏற பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும் தென்னிந்திய, வட இந்திய , ஜெயின் உணவு வகைகள் தரமாக தயாரிக்கப்பட்டு ஆரோக்கியமான சைவ உணவு பயணிகளுக்கு வழங்கப்படும் .கூடுதல் சலுகைகளாக அவசர மருத்துவ தேவைகளுக்காக ஒரு மருத்துவர் ரயிலில் பயணிப் பார். பயணிகளின் தேவைகளை பூர்த்தி செய்ய பயணிகள் சேவை அதிகாரி மற்றும் பயணி உதவியாளர்கள் இருப்பர். மந்த்ராலயம் மற்றும் சீரடிக்கு அனுபவமிக்க வழிகாட்டிகள் இருப்பார்கள்.
சுத்தமான சுகாதாரமான ரயில்வே கோச்சுகள் மற்றும் கழிப்பறைகள் பராமரிக்கப் படும்.
மேலும் இந்தியாவின் ஆன்மீக தலங்களங்களான காசி , இராமேஸ்வரம் திருப்பதி , கயா மற்தும் ஆன்மீக மாநிலமான உத்ரகாண்ட் மாநிலத்திற்கு
கோயம்புத்தூர் ,சென்னை ,மதுரை , கன்னியாகுமரி மற்றும் திருச்சி ஆகிய நகரங்களிலிருந்து ஆன்மீக குடும்ப சுற்றுலா பயணங்களை விரைவில் தொடக்க படும்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Social media & sharing icons powered by UltimatelySocial
WhatsApp