பெண் சாதனையாளர்கள் விருது வழங்கும் விழா .நேச்சுரல்ஸ் பவர் ஆப் உமன் ” பெண் சக்தி 2022 “

https://makkalnanayam.com/news/wp-admin
 "நேச்சுரல்ஸ் பவர் ஆப் உமன் " பெண் சக்தி 2022 " 

பெண் சாதனையாளர்கள் விருது வழங்கும் விழா

நேச்சுரல்ஸ் பவர் ஆப் உமன் ” பெண் சக்தி 2022 “
பெண் சாதனையாளர்கள் விருது வழங்கும் விழாவில் சக்தி 2022 -ன் சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது . இந்நிகழ்ச்சியில் துர்கா ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பெண் தொழில் முனைவோருக்கும் , சாதனை யாளர்களுக்கும் விருதுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார் . இந்தியாவின் முதல் ஸ்மார்ட் சலூனாக விளங்க புதிய இணையதளத்தை துர்கா ஸ்டாலின் தொடங்கி வைத்தார் .
இதன் மூலம் புதிய தொழில் முனைவோர் உருவாகவும், சருமம் மற்றும் சிகை அலங்கார கலையின் மூலம் அடுத்த தலைமுறையினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உதவும் .

நேச்சுரல்ஸ் இயக்குனர் வீணா குமரவேல் , இணை இயக்குனர் குமரவேல் ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்
கலைமாமணி சுதா ரகுநாதன் .சாகித்யா ஜெகநாதன் , அர்ச்சனா சந்தோகி , நடிகை சிம்ரன் , டாக்டர் மணிமேகலை மோகன், டாக்டர் மரியசீனா ஜான்சன், எம். கே . வினுஷா, தொழிலதிபர் , கீதா நாகு , திருநங்கை நமிதா மாரிமுத்து , ஸ்ருதி நகுல் , பேச்சாளர் பாரதி பாஸ்கர் , ஹேமலதா அண்ணாமலை. பூர்ணிமா பாக்யராஜ்,- சினிமா, பொழுதுபோக்கு மற்றும் வணிகம்

மகாலட்சுமி நரசிம்மன்- விவசாயம்
ப்ரீத்தி சீனிவாசன் – சமூக சீர்திருத்தவாதி
ஜெயஸ்ரீ உம்மிடி- வணிகம் மற்றும் விருந்தோம்பல்
அனுஷா சுவாமி- தொழில்முனைவு மற்றும் டிஜிட்டல் மீடியா
சம்யுக்தா எஸ் – பொழுதுபோக்கு மற்றும்டிஜிட்டல் மீடியா
ரதி ஷெட்டி – தொழில்முனைவு
ஜோரைன் கலீலி – ஒப்பனை கலைஞர் மற்றும் பயிற்சியாளர்
பூஜா புனித் – லைஃப் டிசைனர்
தோஷிலா உமாசங்கர்- ஆர்ஜே மற்றும் தொகுப்பாளர் ஆகியோருக்கு விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Social media & sharing icons powered by UltimatelySocial
WhatsApp