.எஸ்.டீ.பி.ஐ கட்சி நிர்வாகி மீது கொலைவெறிதாக்குதல் நடத்திய குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி டி.ஜி.பி அலுவலகம் நோக்கி முற்றுகை போராட்டம்.

எஸ்.டி.பி.ஐ கட்சி நிர்வாகி மீது தாக்குதல் நடத்திய குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி டி.ஜி.பி அலுவலகம் நோக்கி முற்றுகை போராட்டம்.
எஸ்டிபிஐ கட்சியின் விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் அக்பர் அலி மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி சென்னை டிஜிபி அலுவலகத்தை நோக்கி எஸ். டி. பி, ஐ கட்சியினர் முற்றுகை போராட்டம் நடத்தினர் .
எஸ்.டி.பி.ஐ கட்சியின் சென்னை வடக்கு மாவட்ட தலைவர் சலீம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநிலத் துணைத் தலைவர் அப்துல் ஹமீத், மாநில செயலாளர் ஏ.கே.கரீம் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்ட தலைவர் பொதுச் செயலாளர்கள் முன்னிலை வகித்தனர்.
முற்றுகை போராட்டத்தில் கண்டன உரையாற்றிய மாநில துணைத் தலைவர் அப்துல் ஹமீது :
கடந்த மார்ச் 25ஆம் தேதி எஸ். டி. பி. ஐ கட்சி விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் அக்பர்அலி மீது விழுப்புரம் மாவட்ட தமுமுக தலைவர் முஸ்தாக் தலைமையில் மாவட்ட நிர்வாகி பைசல் அகமது உள்பட கூலிப்படையைச் சேர்ந்த ரஜப், பாஷா ,நந்திவர்மன், ராஜ்குமார் ஆகியோர் இணைந்து ஆயுதங்களைக் கொண்டு கொலைவெறித் தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். இந்த தாக்குதலில் காயமடைந்த அக்பர் அலி மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் .
தாக்குதல் தொடர்பாக மேற்கண்ட நபர்கள் மீது புகார் அளிக்கப்பட்டு முதல் தகவல் அறிக்கையில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. ஆயினும் தாக்குதல் தொடர்புடைய சூத்திரதாரியான முஸ்தாக் மற்றும் ம. ம. க நிர்வாகிகள் மீது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் காவல்துறை தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை கேடுவிளைவிக்கும் யாராக இருந்தாலும் அவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கும் என தமிழக முதல்வர் அவர்கள் தெரிவித்த நிலையில் முதல்வரின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழக காவல்துறை இந்த விவகாரத்தை சட்டப்படியான நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளாதது ஏன்? ஆளும் கூட்டணியைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் பாதுகாக்க காவல்துறை முயற்சி மேற்கொள்கிறார்களா? என்று கேள்வி எழுகிறது.
ஆகவே தமிழக காவல்துறை எஸ்.டி.பி.ஐ மாவட்ட செயலாளர் அக்பர் அலி மீது தாக்குதல் நடத்திய குற்றவாளிகளுக்கு துணை போகாமல் உடனடியாக கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் .
இல்லாவிட்டால் தமிழகம் தழுவிய அளவில் போரட்டத்தை எஸ்.டி.பி.ஐ கட்சி நடத்தும் என தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Social media & sharing icons powered by UltimatelySocial
WhatsApp