சிசு ஃபெர்டிலிடி ஃபவுண்டேஷன் ( sisu Fertility Foundation) மருத்துவமனை சென்னை அசோக் நகர் பகுதியில் திறப்பு விழா .

கடந்த 25 ஆண்டுகளாக வெற்றிகரமாக சேலத்தில் செயல்பட்டுவரும் மருத்துவமனையின் சென்னை கிளை ஃபெர்டிலிடி ஃபவுண்டேஷன் மருத்துவமனை சென்னை அசோக் நகர் பகுதியில் திறப்பு விழா நடைபெற்றுள்
இம்மருத்துவமனையை துளுவ வேளாளர் சங்க தலைவர் கே பி கே செல்வராஜ் , தமிழ்நாடு தகவல் ஆணையர் பிரதாப் குமார் , காவல்துறை துணை ஆணையர் அசோக்குமார், அப்போலோ மருத்துவமனை மருத்துவர் விஜயகுமார் ஆகியோர் ஒவ்வொரு பிரிவையும் திறந்து வைத்தனர்.

மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் முத்துக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
இங்கு உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை யளிக்கும் விதத்தில் பல உயர்தர சிகிச்சைக்கான நவீன மயமான உபகரணங்கள் பயன்படுத்தப்படுகின்றன .
மேலும் இம்மருத்துவமனைக்கு வெளிநாடுகளிலிருந்தும் மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் ஆண்கள் பெண்கள் என இருபாலருக்கும் குழந்தைப் பேரின்மைக்கான சிகிச்சை அளித்து 70% பாசிட்டிவ் முடிவுகள் தந்துள்ள ஒரே மருத்துவமனை சிசு மருத்துவமனையாகும். அதேபோல் கொரோனா காலத்தில் அரசு வழிகாட்டுதலை கருத்தில் கொண்டு , அதை பின்பற்றி , இங்கே சிகிச்சை பெற வருபவர்களுக்கு தகுந்த முறையில் போதுமான பாதுகாப்பு நடவடிக்கையை செய்கிறோம் . இவ்வாறு நிர்வாக இயக்குனர் டாக்டர் முத்துக்குமார் தெரிவித்தார் மருத்துவ இயக்குனர் டாக்டர் உமா பாரதி உடனிருந்தார்.

Makkal Nanayam

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Social media & sharing icons powered by UltimatelySocial
WhatsApp