சீரம் இன்ஸ்டிடியூட்டில் இருந்து மாநிலங்களுக்கு கோவிஷீல்டு தடுப்பூசிகள் விநியோகிக்கும் பணி தொடங்கியது

புனே: மகாராஷ்டிராவின் புனே சீரம் இன்ஸ்டிடியூட்டில் இருந்து கொரோனாவை தடுக்கும் கோவிஷீல்டு தடுப்பூசிகளை மாநிலங்களுக்கு விநியோகிக்கும் பணி இன்று அதிகாலை தொடங்கியது.

உலக நாடுகளின் மொத்த கொரோனா பாதிப்பில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் மொத்தம் 1,04,79,913 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் புனே சீரம் இன்ஸ்டிடியூட்டில் இருந்து கோவிஷீல்டு தடுப்பூசிகளை அனுப்பும் பணிகள் இன்று அதிகாலை தொடங்கியது. முதல் கட்டமாக 3 டிரக்குகளில் கோவிஷில்டு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டு புனே சர்வதேச விமான நிலையம் சென்றடைந்தன. நாட்டின் 13 இடங்களுக்கு 8 விமானங்கள் மூலம் இந்த தடுப்பூசிகள் கொண்டு சேர்க்கப்பட உள்ளன. முதல் விமானம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றது. சென்னைக்கு காலையில் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்து சேரும் என தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Social media & sharing icons powered by UltimatelySocial
WhatsApp