Archive For December 30, 2017

குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு! முதல்வர் அறிவிப்பு! 29-Dec-2017 latest news பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பினை அறிவிக்கப்பட்டுள்ளார் முதல்வர் பழனிசாமி. இது தொடர்பாக இன்று அவர் வெளியிடப்பட்ட அறிக்கையில், “தமிழர் பண்டிகை பொங்கல் திருநாள், அறுவடைத் திருநாளாகவும், உலகத்து மக்களுக்கு உணவளிக்கும் உழவர்களைப் போற்றிடும் திருநாளாகவும், விவசாயிகள் இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் நன்நாளாகவும் விளங்குகிறது. பொங்கல் திருநாளை தமிழ்நாட்டு மக்கள் சிறப்பாகவும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடும் வகையில், அரிசி குடும்ப அட்டை…

ஜனவரி-7 திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: ஸ்டாலின் அறிவிப்பு 29-Dec-2017 latest news ஜனவரி 7ம் தேதி சென்னையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஓகி புயல் நிவாரணமாக தமிழக அரசு கோரியுள்ள தொகையை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். திமுக உயர்நிலைக்குழு கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் பெரும்பான்மை இல்லாத ஆட்சி நீடிக்க கூடாது எனவும் ஸ்டாலின்…

சட்டப்பேரவையில் டிடிவி தினகரன் எம்.எல்.ஏவாக பதவியேற்பு! 29-Dec-2017 latest news தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கு அண்மையில் நடைபெற்ற இடைத்தேர்தலில் ஆர் கே நகர் சட்டமன்ற தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட டிடிவி தினகரன் அவர்கள் பேரவைத் தலைவர் அவர்களது முன்னிலையில் இன்று இந்திய அரசமைப்பிற்க்கிணங்க சட்டமன்ற பேரவை உறுப்பினராக உறுதி மொழி எடுத்து கொண்டார்.

முதல்வர் முன்னிலையில் தினகரன் அணி ஆதரவு நிர்வாகிகள் இன்று அதிமுகவில் இணைந்தனர்! 04-Jan-2018 latest news தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களது இல்லத்தில் டி.டி.வி தினகரன் அணியில் தென் சென்னை வடக்கு மாவட்டம் ஆயிரம் விளக்கு மேற்கு பகுதி செயலாளர் ஆர். சதாசிவம், 109-வட்ட செயலாளர் கே. கபிலன், மேலமைம்பு பிரதிநிதி பி.சதீஸ்குமார், நமசை கே.பி. முத்து, ஆகியோர் இன்று அதிமுக வில் தங்களை இணைத்து கொண்டனர். இதில் முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி உடன் இருந்தார்.

முத்தலாக் மசோதா: முஸ்லிம்களை தண்டிக்கும் மத்திய அரசு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்! 28-Dec-2017 latest news முத்தலாக் மூலம் விவாகரத்து செய்வோருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கும் மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. முஸ்லிம்களை சீண்டிப் பார்க்க வேண்டும் என்ற ஒரே நோக்கில் இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த மத்திய பா.ஜ.க. அரசை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாகக் கண்டிக்கிறது. மனைவியை விவாகரத்து செய்யும் நிலைக்கு தள்ளப்பட்ட கணவன்மார்களுக்கு மூன்று வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. முதல்…

சென்னை மாவட்டத்தில் நாளை “அம்மா திட்டம்” சிறப்பு முகாம்! 28-Dec-2017 latest news மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் தொடங்கப்பட்ட “அம்மா திட்டம்” வருவாய் துறை சார்பில் (29-12-17) நாளை சென்னையில் 5-வட்டங்களில் நடைபெற உள்ளது. 1,விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதி 10-வது மண்டலம் சாலிகிராமம் 129-வட்டத்தில் உள்ள சென்னை பெருநகர மாநகராட்சி வார்டு அலுவலகம். 2, சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி 9-வது மண்டலம் ராயப்பேட்டை 115-வது வட்டத்தில் உள்ள மாநகராட்சி சமுதாய கூடம். 3,…

வைகோ மலேசியாவுக்குள் நுழையத் தடை! மத்திய அரசு கண்டனம்! வைகோ மகிழ்ச்சி! 27-Dec-2017 latest news வைகோ விமான நிலைய சம்பவம் குறித்து மத்திய அரசு மலேசியாவுக்குக் கண்டனம்! இந்திய அரசின் வெளிவிவகாரத்துறை அமைச்சகத்திலிருந்து வைகோ அவர்களுக்கு 2017 டிசம்பர் 7ஆம் தேதி ஒரு கடிதம் அனுப்பி இருக்கிறார்கள். அந்தக் கடித விவரம் வருமாறு: – 2017 ஜூன் 9 ஆம் தேதி கோலாலம்பூர் விமான நிலையத்தில் சந்திக்க நேர்ந்த துரதிருஷ்டவசமான சம்பவம் குறித்து பிரதம அமைச்சர் அவர்களுக்கு கடிதம்…

ஆர்.கே.நகர் தொகுதியில் சட்ட மன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட டி.டி.வி தினகரனை கட்சி நிர்வாகிகளும், பொதுமக்களும் சந்தித்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக ஆர்.கே.நகர் வாக்காளர்கள் படை யெ டுத்த வண்ணம் உள்ளனர். அவர்கள் எந்த விதத்திலும் மனம் கோணாது இருக்கும் வகையிலும், அவர்களின் குறைகளை உடனுக்குடன் களையும் வகையிலும் ஆர்.கே.நகர் பகுதியில் அலுவலகம் பணியை தொடர்வது மட்டுமல்லாது அதே குடியேற போவதாக கற்பகம் கார்டன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை அளித்த ஆர்.கே.நகர் தொகுதி மக்களுக்கு நான்…
பாஜகவின் தலையீட்டை விரும்பாத மக்களே டிடிவி தினகரனுக்கு ஆர்.கே நகரில் ஆதரவு அளித்துள்ளதாக எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் தெஹ்லான் பாகவி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர், ”தமிழ்நாட்டில் நடைபெறுகிற பொதுத்தேர்தல்களாக இருந்தாலும், இடைத்தேர்தல்களாக இருந்தாலும் வாக்குக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது என்கிற குற்றச்சாட்டு அதிகமாகவே முன்வைக்கப்படுகிறது. வாக்குக்கு பணம் கொடுப்பது என்பதில் இந்தியாவிலேயே தமிழகம் முன்னிலையில் இருக்கிறது என்கிற கருத்து அதிகமாக முன் வைக்கப்படுகிறது. எந்த கட்சி வாக்குக்கு பணம் கொடுத்தாலும், அது கண்டிக்கத்தக்கதே….